மேதக்,
தெலுங்கானாவில் மேதக் மாவட்டத்தில் பைக் மற்றும் டிராக்டர் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரே குடும்பத்தின் 4 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி சங்கராம்பேட்டை காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் கூறும்போது, செரிலிங்கம்பள்ளியில் இருந்து ஒரே குடும்பத்தினை சேர்ந்த சிலர் பைக் ஒன்றில் சொந்த கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, இந்த விபத்து நடந்தது.
டிராக்டர் ஓட்டுநர் அலட்சியத்துடன் வண்டியை ஓட்டியிருக்கிறார். அடிப்படை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எதுவும் இன்றி அவர் ஓட்டி சென்றுள்ளார். இரவில் தெளிவற்ற சூழலால், பின்னால் வந்த அந்த பைக், டிராக்டரை கவனிக்காமல் அதன் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதில் பைக்கில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.