`விஜய் அண்ணன்… விஜய் அண்ணன்தான்; எஸ்.கே தம்பி…' – நடிகர் சூரி

வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி’, `கருடன்’, ‘மாமன்’ எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி.

இப்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், `மண்டாடி’ எனும் படத்தில் நடித்த் வருகிறார். வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தைத் தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பங்களிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

பாய்மரப் போட்டியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது.

நடிகர் சூரி
நடிகர் சூரி

சினிமா வாழ்வைப் போலவே  ‘அம்மன்’ உணவகத்தை ஆரம்பித்து பெரிய தொழிலதிபராகவும் உருவெடுத்து வருகிறார் சூரி.

அவ்வகையில் ஏற்கனவே மதுரையில் தெப்பக்குளம், ஊமச்சிகுளம், ரிசர்வ் லைன், நரிமேடு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இந்த உணவகம் பிரபலாகிவிட்டது.

இந்நிலையில் இன்று மதுரை மாட்டுத்தாவணியில் அம்மன் உணவகத்தை திறந்து வைத்திருக்கிறார் நடிகர் சூரி. அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “மதுரையில் 12 வது அம்மன் உணவகத்தின் கிளையை மாட்டுத்தாவணியில் திறந்து வைத்துள்ளேன். முழுக்க முழுக்க என் குடும்பத்தின் ஆதரவின் காரணமாக உணவகத்தை நடத்தி வருகிறேன்” என்றார்.

நடிகர் சூரி
நடிகர் சூரி

விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனா? என்பது குறித்து பேசிய சூரி, “யாருக்கும் யாரும் போட்டி கிடையாது. விஜய் அண்ணன், விஜய் அண்ணன் தான். SK தம்பி, SK தம்பி தான். எல்லோருக்கும் மக்கள் ஆதரவு உள்ளது. விஜய் அண்ணன் உச்சத்தில் உள்ளார். தம்பி சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார்

யாருக்கும் யாரும் போட்டியாளர்கள் இல்லை. தங்களது வேலையை திறம்பட செய்தாலே எல்லாம் சரியாக இருக்கும். இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது.

நான் எனது முழு உழைப்பை அதில் போட்டுள்ளேன். மீனவர்கள் குறித்து பேசும் இதுபோன்ற கதையை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் விரைவில் வெளியாகும். அதேபோல இயக்குநர் ராம் உடன் ஒரு படம் தயாராகி கொண்டிருக்கிறது” என்று பேசியிருக்கிறார் சூரி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.