2025ஆம் ஆண்டு U19 ஆசிய கோப்பை நேற்று முன்தினம் (டிசம்பர் 12) முதல் தொடங்கி துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இத்தொடரில் இந்திய அணியின் வீரர் வைபவ் சூர்யவன்சி அசத்தி வருகிறார். ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அண்டர் 19 ஆசிய கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்சி படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சூர்யவன்சியின் இந்த ஆட்டம் அவரை இணையத்தில் அதிகமாக தேட வைத்திருக்கிறது. கூகுளில் அவரை தேடுவோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்திருக்கிறது.
Add Zee News as a Preferred Source
Vaibhav Suryavanshi vs Virat Kohli: விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய சூர்யவன்சி
இதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை முந்தி உள்ளார். போட்டி முடிந்த பின்னர் இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டது. உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா என்று தெரியவில்லை. இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் லிஸ்ட்டில் உங்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில் நீங்கள் விராட் கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளீர்கள். இந்த புகழை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த வைபவ் சூர்யவன்சி, நான் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. எனது கவனம் முழுவதும் விளையாட்டில்தான் உள்ளது. ஆனால் மக்கள் என்னை தேடுகிறார்கள், என்னை பற்றி பேசுகிறார்கள் என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அவ்வளவுதான். அதன் பிறகு அதனை சிந்திப்பதில்லை. கடந்து சென்றுவிடுவேன் என கூறி உள்ளார்.
U19 Asia Cup 2025: இன்னும் பல சாதனைகள் படைப்பார்
வைபவ் சூர்யவன்சி அடித்த இந்த 171 ரன்கள் மூலம் அவர் அண்டர் 19ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முன்னதாக அம்பத்தி ராயுடு 177 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். அவர் அந்த சாதனையை 2002ஆம் ஆண்டு படைத்தார். மேலும், வைபவ் சூர்யவன்சி ஒரு இன்னிங்ஸில் 14 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனையை படைத்திருக்கிறார். ஆசிய கோப்பை அண்டர் 19ல் இந்திய அணி இன்று தனது இரண்டாவது போட்டியை விளையாடி வருகிறது. இப்போட்டியில் சூர்யவன்சி 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இருப்பினும் வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி பல சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
R Balaji