மதுரை: மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை, இதுபோன்ற தூண் சமண மலையிலும் உள்ளது என்றும் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வாதம் செய்தது. திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (டிசம்பர் 15) 2வது நாளாக நடந்து வருகிறது. மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை மாவட்டம், […]