IND vs SA: அக்சர் படேல் நீக்கம்! அணியில் இணைந்த ஷபாஸ் அகமது – யார் இவர்?

Ind vs Sa 4th T20: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தற்போது தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், அணியின் முக்கிய ஆல்-ரவுண்டரான அக்சர் படேல் (Axar Patel) உடல்நல குறைவு காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான ஷபாஸ் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

அக்சர் படேலுக்கு என்னாச்சு?

முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அக்சர் படேல், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் உடல்நல குறைவால் பங்கேற்கவில்லை. தற்போது லக்னோவில் உள்ள இந்திய அணியுடன் தங்கியுள்ள அவர், மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலையை தொடர்ந்து பரிசோதித்து வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடிய அக்சர், 44 ரன்கள் குவித்ததுடன், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு முக்கிய பங்காற்றினார்.

 NEWS TeamIndia allrounder, Axar Patel has been ruled out of the remaining two @IDFCFIRSTBank T20Is against South Africa due to illness.

 Details | #INDvSA | @akshar2026 https://t.co/CZja7iaLNm

— BCCI (@BCCI) December 15, 2025

ஷபாஸ் அகமது வருகை

அக்சர் படேல் விலகியதை தொடர்ந்து, மீதமுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். ஷபாஸ் அகமது இதுவரை இந்தியாவுக்காக 3 ஒருநாள் போட்டிகளிலும், 2 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடைசியாக அக்டோபர் 2023ல் இந்திய ஜெர்சியை அணிந்தார். ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் உட்பட 114 ஆட்டங்களில் விளையாடி 73 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். எகானமி ரேட் 7.87 ஆகும். பேட்டிங்கிலும் கை கொடுக்கக்கூடிய இவர், 1,355 ரன்களை (சராசரி 25.56, ஸ்ட்ரைக் ரேட் 135.77) குவித்துள்ளார்.

தொடரின் நிலை

மூன்றாவது டி20 போட்டியில் அக்சர் படேல் இல்லாமலேயே இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, தென்னாப்பிரிக்காவை வெறும் 117 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்றனர். ஜஸ்பிரித் பும்ராவும் தனிப்பட்ட காரணங்களுக்காக மூன்றாவது போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது ஷபாஸ் அகமதுவின் வருகை அணியின் சுழற்பந்து வீச்சுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை கைப்பற்ற இந்திய அணி அடுத்த போட்டியிலேயே வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.