ஐபிஎல் 2026 மினி ஏலம் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது வழக்கமான ஸ்டைலில் சில ஸ்மார்ட்டான மூவ்களை செய்துள்ளது. கையில் மிகக்குறைந்த தொகையாக ரூ. 2.75 கோடி மட்டுமே இருந்தபோதிலும், அணியின் சமநிலையை வலுப்படுத்தும் வகையில் 5 வீரர்களை மும்பை அணி வாங்கியுள்ளது. குறிப்பாக, தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குவின்டன் டி காக்கை மிகக்குறைந்த விலையில் தட்டித் தூக்கியது மும்பை ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ்!
Add Zee News as a Preferred Source
pic.twitter.com/h0IYwS1LZJ
— Mumbai Indians (@mipaltan) December 17, 2025
ஏலத்தில் மும்பையின் அணுகுமுறை
ஏற்கனவே ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்ற ஜாம்பவான்களை கொண்ட மும்பை அணி, ஏலத்திற்கு முன்பே தனது Core டீமை செட் செய்துவிட்டது. இதனால் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை. இருப்பினும், அணியின் பெஞ்ச் வலிமையை அதிகரிக்கவும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவும் இந்த ஏலத்தை பயன்படுத்திக்கொண்டனர்.
புதிய வரவுகள்
இந்த ஏலத்தில் மும்பை அணியின் மிகப்பெரிய Steal குவின்டன் டி காக் தான். அனுபவமிக்க இந்த விக்கெட் கீப்பரை அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்கு வாங்கியது மும்பை நிர்வாகத்தின் சாமர்த்தியத்தை காட்டுகிறது. ஏற்கனவே மும்பை அணிக்காக சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, 4 இளம் இந்திய வீரர்களைத் தலா ரூ. 30 லட்சத்திற்கு வாங்கியுள்ளனர்.
முகமது இசார் (Mohammad Izhar)
டானிஷ் மலேவர் (Danish Malewar)
அதர்வா அன்கோலேகர் (Atharva Ankolekar)
மயங்க் ராவத் (Mayank Rawat)
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
ஏலத்திற்கு முன்பே மும்பை அணி சில முக்கிய மாற்றங்களை செய்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடமிருந்து ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை வாங்கியது. இதற்கு மாற்றாக அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோவுக்கு அனுப்பியது. மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்து ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் கேகேஆர் அணியிடமிருந்து மயங்க் மார்கண்டே ஆகியோரையும் டிரேட் மூலம் அணியில் சேர்த்துள்ளது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் உட்பட 10 வீரர்களை அணி விடுவித்தது. ஹர்திக் பாண்டியா தலைமையில், ரோஹித் சர்மாவின் அனுபவ ஆலோசனையில், பும்ராவின் அசுர வேகத்தில் மும்பை இந்தியன்ஸ் 6-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் முழு அணி விவரம்
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, குவின்டன் டி காக் (WK), ராபின் மின்ஸ் (WK), ரியான் ரிக்கல்டன் (WK), நமன் திர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், மயங்க் ராவத், டானிஷ் மலேவர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், வில் ஜாக்ஸ், கார்பின் போஷ், ராஜ் பாவா, அதர்வா அன்கோலேகர், ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், மயங்க் மார்கண்டே, ஏ.எம். கசன்பர், அஸ்வினி குமார், ரகு சர்மா, முகமது இசார்.
About the Author
RK Spark