கின்ஷாசா,
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கனிம வளங்கள் அதிகம் மிக்க இந்த நாட்டில் அதிக அளவில் சுரங்கங்கள் தோண்டி வைரங்கள், எண்ணெய் வளங்கள் ஆகியவை சர்வதேச நாடுகள் தோண்டி எடுத்து ஏற்றுமதி செய்கிறது. இதற்கான ஒருபகுதி வருவாய் மத்திய அரசாங்கத்திடம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இதனை எதிர்க்கும் வகையில் எம்-23 என்ற புரட்சிப்படையினர் மக்களுக்கு ஆதரவாக களம்இறங்கி போராடி வந்தனர். நாளடைவில் இந்த போராளிகளுக்கு அண்டை நாடான ருவாண்டா நிதி, ஆயுதம் வழங்கி ஆதரித்து வந்தது. இதனால் அவர்கள் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை ஆக்கிரமித்து வந்தனர்.
மேலும் இதற்காக அப்பாவி பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை கொன்று குவித்து வந்தனர். இந்த தாக்குதலை நிறுத்த அமெரிக்கா சார்பில் ருவாண்டா அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டநிலையில் காங்கோவில் இருந்து எம்-23 பயங்கரவாதிகளை திரும்ப அழைத்து வெளியேற்றுவதாக ருவாண்டா உறுதியளித்தது.