Chennai Super Kings: 19வது ஐபிஎல் தொடர் வரும் 2026 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில், இத்தொடருக்கான மினி ஏலம் நேற்று மின்தினம் (டிசம்பர் 16) நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கபப்ட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில முக்கிய வீரர்களையும் இளம் வீரர்களையும் எடுத்தது. குறிப்பாக பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா என இரண்டு இளம் வீரர்களுக்கு ரூ. 28 கோடி செலவழித்து வாங்கி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் இந்த பிளான் அனைவரையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறது. இதுவரை ஐபிஎல்லில் விளையாடாத சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்த வீரர்களை ஏன் சென்னை அணி இவ்வளவு விலை கொடுத்து வாங்கி இருக்கிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழும்பி உள்ளது.
Add Zee News as a Preferred Source
Ravindra Jadeja: ஜடேஜாவை விட்டுக்கொடுத்த சிஎஸ்கே
அதேபோல் மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே டிரேட் மூலம் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயலஸ் அணியிடம் இருந்து வாங்கியது. பதிலாக ரவீந்திர ஜடேஜாவை விட்டுக்கொடுத்தது சென்னை அணி. இது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஜடேஜா சிஎஸ்கே-வின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். குறிப்பாக 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக ஜடேஜா இருந்தார். இதனால் சிஎஸ்கே அணி தனது 5வது கோப்பையை வென்றது. இப்படி சிஎஸ்கே அணியின் தூணாக இருந்த ஜடேஜாவை ஆர்ஆர் அணிக்கு கொடுத்தது ரசிகரகள் இடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
Why CSK Trade Sanju Samson: சஞ்சு சாம்சனை வாங்கியது ஏன்?
இந்த நிலையில், சஞ்சு சாம்சனை ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து நாங்கள் வாங்கினோம் என விளக்கி உள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங். மேலும், எம்.எஸ். தோனி விரைவில் ஓய்வு பெற இருக்கிறார் என்றும் கூறினார். இது தொடர்பாக பேசிய அவர், எங்கள் ஓப்பனிங் பேட்டிங் கொஞ்சம் சரியாக இல்லாதது போல் உணர்ந்தோம். எங்களுக்கு அங்கே வாய்ப்பிருந்தது. அதோடு எம்.எஸ். தோனி விரைவில் ஓய்வு பெற இருக்கிறார் என்பதையும் உணர்ந்தோம். எனவேதான் சஞ்சு சாம்சனை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். சஞ்சு சாம்சன் சர்வதேச அரங்கில் விளையாடி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் 3 சதங்களை அடித்து இருக்கிறார். இது அடுத்த 6 ஆண்டுகளுக்கான திட்டமாகும் என பிளேமிங் கூறினார்.
சஞ்சு சாம்சன் இதுவரை 177 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அதில் அவர் 4704 ரன்களை குவித்து உள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் அடங்கும். அதேபோல் இந்திய டி20 அணிக்காக 51 போட்டிகளில் விளையாடி 995 ரன்களை அடித்துள்ளார். அவர்கள் தலா 3 சதம் மற்றும் அரைசதங்களை அடித்து விளாசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Full List Of Chennai Super Kings Players: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், எம்எஸ் தோனி, உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ், குர்ஜப்னீத் சிங், நாதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்திரி, சஞ்சு சாம்சன், அகேல் ஹொசைன், பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபோல்க்ஸ்.
About the Author
R Balaji