அசாமில், மிகவும் அரிதான ஒரு சம்பவத்தில், ராஜநாகம் கடித்த ஒருவர் சிகிச்சை மற்றும் திறமையான குழுப்பணி காரணமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த சம்பவம், ராஜநாகம் கடித்த பிறகு உயிர் பிழைத்ததாக அசாமில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட முதல் நிகழ்வாகும். தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் ராஜநாகம் கடித்து வெகு சிலரே உயிர்பிழைத்துள்ளனர் பெருபாலான நிகழ்வுகள் உயிரிழப்பில் முடிந்துள்ளன. ராஜநாகக் கடி மிகவும் அரிதானது, மேலும் அந்த குறிப்பிட்ட இனத்திற்கான விஷமுறிவு மருந்து இல்லாததால், அதன் விளைவுகள் பெரும்பாலும் மோசமாகவே இருக்கும். […]