When Will BCCI Announce India’s Squad for T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மார்ச் 08ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், நேபால், யுஏஇ, நெதர்லாந்து, நபிபியா, கனடா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஓமன் இத்தாலி என மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 4 குருப்பாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா குருப் ஏ-வில் உள்ளது.
Add Zee News as a Preferred Source
நாளை (டிசம்பர் 20) அறிவிக்கும் பிசிசிஐ?
இத்தொடருக்கு முன்னதாக 2026 ஜனவரி மாதம் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், நாளை இத்தொடர்களுக்கான அணிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதவாது பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கினாலும், ஒவ்வொரு அணியும் ஒரு மாதத்திற்கு முன்பே தங்களது அணியை அறிவிக்க வேண்டும். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருடன் சேர்த்து உலகக் கோப்பை அணியையும் அஜித் அகர்கர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Shubman Gill: துணை கேப்டனாக தொடரும் சுப்மன் கில்?
இந்த நிலையில், அறிவிக்கப்பட இருக்கும் இந்திய அணியில் இடம் பெறக்கூடிய வீரர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இந்திய டி20 அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ்-வே தொடருவார். பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்தாலும் துணை கேப்டனாக சுப்மன் கில்லே தொடருவார் என தெரிகிறது. உலகக் கோப்பை அணிக்கு ரிசர்வ் வீரர்களும் அறிவிக்கப்படுவார்கள். மெயின் டீமில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், ரிசர்வ் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், இஷான் கிஷன், சிராஜ் போன்ர வீரர்களாக இருப்பார் என எதிபார்க்கப்படுகிறது.
Sanju Samson: சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் 11ல் இடம் இருக்குமா?
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இவ்விரு தொடர்களிலும் இடம் பிடிப்பார் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவருக்கு பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா என்ற கேள்வியே தொடர்ந்து நீடித்து வருகிறது. ஏற்கனவே சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமித்தில் இருந்து அவரே தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் 11ல் இடம் கிடைக்காமல் உள்ளது. தொடக்க வீரராக இல்லை என்றாலும் கூட மிடில் ஆர்டரில் அவரை விளையாட வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் அதையும் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில், வரும் டி20 போட்டிகள் மற்றும் டி20 உலகக் கோப்பையிலாவது பிளேயிங் 11ல் இடம் பிடிப்பாரா என்ற கேள்வி தொடர்கிறது.
India Predicted Team For 2026 T20 World Cup: டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் உத்தேச அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்) அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்),ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங்.
ரிசர்வ் வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், ரிங்கு சிங், இஷான் கிஷன்.
About the Author
R Balaji