Coldplay: `அங்கு எங்களை யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைத்தோம்.!" – முதல்முறையாக பேசிய பெண் HR

ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) ஆண்டி பைரனும், அதே நிறுவனத்தின் மனித வளத்துறை அலுவலராக( HR) பணியாற்றிய கிறிஸ்டின் கபோட்டும் சில மாதங்களுக்கு முன்பு ‘Coldplay’ இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நெருக்கமாக இருந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கிறிஸ்டின் கபோட் (HR) ‘The New York Times’ ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

Coldplay இசை நிகழ்ச்சியில்...
Coldplay இசை நிகழ்ச்சியில்…

“மதுபானம் அருந்திவிட்டு என் மேலாளருடன் நடனமாடி, முறையற்ற வகையில் நடந்துகொண்டேன்.

அது நான் செய்த தவறுதான். ஆனால் இதற்காக நான் என் வேலையையே இழந்துவிட்டேன்.

இந்த சம்பவத்திற்கு பிறகு சமூக ஊடக தாக்குதல்களுக்கும், கொலை மிரட்டல்களுக்கும் உள்ளானேன்.

50,000–60,000 பேர் இருந்த அரங்கில், எங்களை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்தோம்.

Coldplay இசை நிகழ்ச்சியில்...
Coldplay இசை நிகழ்ச்சியில்…

ஒரு பெண்ணாக நான் பெரும் அவமானங்களை சந்தித்தேன். என் வாழ்க்கையில் நான் சாதித்த அனைத்தையும் மக்கள் அழித்துவிட்டார்கள்.

இது என் வாழ்க்கையின் இறுதி தீர்ப்பாக இருக்க முடியாது. ஒருவர் செய்யும் தவற்றை வைத்து அவர்களின் முழு வாழ்க்கையையும் தீர்மானித்துவிடக்கூடாது.

நான் ஒருவனுடன் உறவில் இருந்தாலும் கூட அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். அதில் தலையிடுவது மற்றவர்களின் வேலை கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.