கேப்டன் பதவில் இருந்து நீக்கப்படும் சூர்யகுமார் யாதவ்? பிசிசிஐ அதிரடி..முழு விவரம்!

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை நேற்று (டிசம்பர் 20) அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு அறிவித்தது. ஆனால் இந்த அணியில் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் இடம் பெறவில்லை. இது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சுப்மன் கில்லின் மோசமான ஃபார்மே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் அஜித் அகர்கர் இந்திய அணியின் காம்பினேஷனை கருத்தி கொண்ட அவர் நீக்கப்பட்டார் என்றும் அவர் சிறந்த வீரர் எப்போது வேண்டுமானாலும் ஃபார்மிற்கு திருப்புவார் எனவே அவரது திறமையில் சந்தேகப்பட்டு இந்த முடிவு எடுக்கப்படவில்லை என கூறினார். 

Add Zee News as a Preferred Source

Shubman Gill: தூக்கி எறியப்பட்ட சுப்மன் கில் 

ஆனால் கடந்த ஓராண்டாகவே டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் தடுவாறிதான் வருகிறார். இந்த ஆண்டு விளையாடிய 15 போட்டிகளில் 291 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 25க்கும் கீழே உள்ளது. சுப்மன் கில் நீக்கப்பட்டதற்கு அஜித் அகர்கர் வேறு காரணங்கள் கூறினாலும், அவரது பேட்டிங் தடுமாற்றமே பிரதான காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், கேப்டன் சூர்யகுமார் யாதவ்வுக்கும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

Suryakumar Yadav: கில்லை விட சூர்யகுமார் யாதவ் படுமோசம் 

சுப்மன் கில்லை போலவே சூர்யகுமார் யாதவும் இந்த ஆண்டு முழுவதும் பேட்டிங்கில் தருமாறி வந்திருக்கிறார். சொல்லப்போனால் கில்லை விட சூர்யகுமார் யாதவ் படுமோசமாக விளையாடி இருக்கிறார். 2025ஆம் ஆண்டில் 19 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், வெறும் 218 ரன்களையே அடித்துள்ளார். அவரது சராசரி 13.6 என அதளபாதாளத்தில் உள்ளது. ஆனால் சூர்யகுமார் யாதவ் டி20 உலகக் கோப்பையில் இடம் பிடித்துள்ளார். அது எப்படி? அவர் கேப்டனாக இருக்கும் ஒரே காரணத்தால் மட்டுமே தப்பித்திருக்கிறார் என்றும் இல்லையென்றால் கில்லை போல சூர்யகுமார் யாதவும் வெளியேறி இருப்பார் என்று கூறப்படுகிறது.

Team India: அணியில் இருந்தே நீக்க வாய்ப்பு 

அதேபோல் வரும் போட்டிகளில் ரன்கள் அடிக்கவில்லை என்றால் டிரெஸ்ஸின் ரூமில் அவரது குரலுக்கு மதிப்பு இருக்காது என்றும் இறுதியில் கேப்டன் பதவி பறியோகி அணியில் இருந்தும் நீக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது ஃபார்மில் இல்லாத கில்லை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை சேர்த்துள்ளது பிசிசிஐ.இதன் மூலம் பெயர் முக்கியம் அல்ல, களத்தில் ஆட்டமே முக்கிய என காட்டி உள்ளது. 

இந்த சூழலில், பழைய ஃபார்ம்-க்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். உலகக் கோப்பையே அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கிறது. அதற்குள் அவர் ஃபார்மிக்கு திரும்பவில்லை என்றால், கேப்டன் பதவி பறிக்கப்பட்டு டி20 அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி 

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்சர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.