ரசிகர்கள் அனைவருமே வரும் 2026 பிப்ரவரியில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலகக் கோப்பையை நோக்கி எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில், இரண்டு நாட்களுக்கு முன்பாக இத்தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. இதில் அதிர்ச்சி என்ன வென்றால், டி20 அணியின் துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில்லை அணியை விட்டு நீக்கி, துணை கேப்டன் பதவி அக்சர் படேலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சஞ்சு சாம்சன் பிளேயிங் 11ல் இருப்பதும் தொடக்க வீரராக அவர் களமிறங்குவதும் உறுதியானது.
Add Zee News as a Preferred Source
BCCI: பிசிசிஐ முடிவுக்கு ரசிகர்கள் ஆதரவு
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவின் இந்த முடிவை ரசிகர்கள் பலரும் வரவேற்றனர். கடந்த ஓராண்டாக ஃபார்மில் இல்லாத சுப்மன் கில்லை கழட்டிவிட்டது சரியான முடிவு என்றும் வீரர்களின் பெயர் முக்கியமல்ல இந்திய அணியின் வெற்றியே முக்கியம் என்பதை இந்த முடிவு வெளிப்படுத்தி உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் வீரர்கள் பலருமே இதனை வரவேற்றே பேசி இருந்தனர். மறுபுறம் எதிர்காலத்தின் கேப்டனாக பார்க்கப்படும் சுப்மன் கில்லை நீக்கியது சரியல்ல என்றும் கூறி வருகின்றனர்.
Shubman Gill: சுப்மன் கில்லை சேர்க்காதது மிகப்பெரிய தவறு
இந்த நிலையில், சும்பன் கில்லை டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்காது தேர்வாளர்கள் செய்த மிகப்பெரிய தவறு என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், டி20 உலகக் கோப்பையில் சுப்மன் கில்லை சேர்க்காதது தேர்வாளர்கள் செய்த மிகப்பெரிய தவறு. ஏனென்றால் இங்கிலாந்து தொடரின்போது அட்டகாசமான ஃபார்மில் இருந்த அவர், இந்திய அணியின் அனைத்து வடிவ நிரந்தர கேப்டனாக பார்க்கப்பட்டார்.
Sanjay Manjrekar supports Shubman Gill: அவசரப்பட்ட பிசிசிஐ
இங்கிலாந்து தொடருக்கு பின்னர் தொடர்ந்து ரன்களை குவித்த அவரால், டி20 கிரிக்கெட்டில் ரன்கள் சேர்க்க முடியவில்லை என்பது உண்மைதான். இருப்பினும் அவர் மிகச்சிறந்த டி20 வீரர். அவருக்கான நேரத்தை அவருக்கு கொடுக்க வேண்டும். அவர் மீண்டும் ஃபார்மிற்கு வரும் நிலையில், இந்திய அணி மிகப்பெரிய பலமடையும். அவரை அவசரப்பட்டு நிர்வாகம் நிராகரித்துவிட்டதாக நான் நினைக்கிறேன் என சஞ்சய் மஞ்சரேக்கர் கில்லுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
2026 T20 World Cup: இந்தியா – இலங்கையில் நடக்கும் டி20 உலகக் கோப்பை
2026 டி20 உலகக் கோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 08ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இவை ஏ, பி என 4 குரூப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியா ஏ குரூப்பில் உள்ளது. இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டிசம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்திய அணி வரும் ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட இருக்கிறது. அதன்பின் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இருக்கிறது.
India Squad For T20 World Cup: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்சர் பட்டேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா.
About the Author
R Balaji