Vijay Hazare Trophy: கோலி, ரோகித் விளையாடும் போட்டிகள்.. எப்போது, எதில் பார்க்கலாம்?

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதையடுத்து இந்த ஆண்டு மே மாதம் முதலில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்த நிலையில், அடுத்த சில நாட்களிலேயே விராட் கோலியும் அந்த வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறினார். தற்போது இருவரும் 2027ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை நோக்கி பயணித்து வருகின்றனர். அதன் காரணமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகினறனர்.

Add Zee News as a Preferred Source

Gautam Gambhir: கழட்டிவிட திட்டமிடும் கம்பீர்

ஆனால் அனுபவம் வாய்ந்த இந்த வீரர்களை வயதை ஒரு காரணமாக காட்டி ஒருநாள் அணியில் இருந்தும் கழட்டி விட தலைமை பயிற்சியாளர் முயற்சி செய்து வருகிறார். அதன் முதல் படியாக ரோகித் சர்மாவை ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கி சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்து அவரது தலைமையில் ஒரு புதிய அணியை கட்டமைக்க தொடங்கி உள்ளனர்.

Virat Kohli & Rohit Sharma: பதிலடி கொடுத்த ரோகித், விராட்

இந்த சூழலில், இருவருமே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருதை வென்று பதிலடி கொடுத்துள்ளனர். இதையடுத்து வரும் 2026ல் ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாட இருகின்றனர்.

எனவே 2027 உலகக் கோப்பை வரை தங்களை எந்த காரணம் கூறியும் அணியில் இருந்து நீக்கிவிடக்கூடாது என்பதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். இருவரும் நாளை (டிசம்பர் 24) தொடங்க இருக்கும் விஜய் ஹசாரே தொடரில் விளையாட உள்ளனர். ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும் விராட் கோலி டெல்லி அணிக்காகவும் விளையாட உள்ளனர்.

Vijay Hazare Trophy: போட்டி விவரம்

ஷர்துல் தாக்கூர் தலைமையிலான மும்பை அணி முதல் இரண்டு போட்டிகளாக நாளை (டிசம்பர் 24) சிக்கிமுடனும் 26ஆம் தேதி உத்தரகாண்ட் அணியுடனும் மோத உள்ளது. இந்த 2 போட்டிகளும் ஜெய்ப்பூரில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

மறுபுறம் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி முதல் 2 போட்டிகளாக நாளை (டிசம்பர் 24) ஆந்திர அணியுடனும் 26ஆம் தேதி குஜராத் அணியுடனும் மோத உள்ளது. இந்த போட்டிகளும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

Vijay Hazare Live Streaming: எதில் பார்க்கலாம்

இவ்விரு போட்டிகளையும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (STAR SPORTS) தொலைக்காட்சியில் பார்த்து ரசிகலாம். அதேபோல் இணையம் மற்றும் மொபைல் செயலியில் ஜியோ ஹாட்ஸ்டார் (JIO HOTSTAR) வாயிலாக பார்க்கலாம். இவ்விரு அணிகளிலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவதால் ரசிகர்கள் திரண்டு ஆதரவு கொடுப்பார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இரு அணிகளின் ஸ்வோட்

மும்பை அணி: ஷர்துல் தாகூர் (கேப்டன்), ரோஹித் சர்மா (இரண்டு கேம்கள்), இஷான் முல்சந்தனி, முஷீர் கான், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, சர்பராஸ் கான், சித்தேஷ் லாட், சின்மய் சுதார், ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர், ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான், டி.எஸ். தேஷ்பாண்டே, டி.எஸ். சாய்ராஜ் பாட்டீல், சூர்யன்ஷ் ஷெட்ஜ்.

டெல்லி அணி: ரிஷப் பந்த் (கேப்டன்), அனுஜ் ராவத் (ஸ்டாண்ட்-பை), அர்பித் ராணா, ஆயுஷ் படோனி (துணை கேப்டன்), ஆயுஷ் டோசேஜா, திவிஜ் மெஹ்ரா, ஹர்ஷ் தியாகி, ஹிருத்திக் ஷோக்கீன், இஷாந்த் சர்மா, நவ்தீப் சைனி, நிதிஷ் ராணா, பிரியன்ஸ் ஆர்யா, பிரின்ஸ் யாதவ், தஜேக் ராணா, சர்ஜேக் ராணா (விக்கெட் கீப்பர்), வைபவ் கண்ட்பால், விராட் கோலி, யாஷ் துல்.

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.