Vaibhav Suryavanshi Latest News: 14 வயதேயான வைபவ் சூர்யவன்சி இளம் வயதிலேயே தனது அதிரடியால் மக்கள் மனதை கவர்ந்துள்ளார். இதுவரை இவரது வயதில் எந்த வீரரும் மக்களிடம் அவ்வளவு எளிதில் சென்றடைந்தது இல்லை. அந்த அளவிற்கு தனது பேட்டிங்கால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இந்த ஆண்டில் கூகுலில் அதிகம் தேடப்பட்டவர்களில் விராட் கோலியை மிஞ்சி இருக்கிறார் வைபவ் சூர்யவன்சி. இது மட்டுமல்லாமல் U-19, டி20 மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் அணி அனைத்திலுமே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தி இருக்கிறார். இந்த நிலையில், வைபவ் சூர்யவன்சியின் டாப் 10 சாதனைகள் குறித்து பார்க்கலாம்.
Add Zee News as a Preferred Source
U-19 மல்டி நேஷன் போட்டியில் அதிக சிக்ஸர்கள்
2025 ஆம் ஆண்டு U-19 ஆசியக் கோப்பையில் வைபவ் 20 சிக்ஸர்களை விளாசி, டெவால்ட் பிரெவிஸின் சாதனையை முறியடித்தார். இது இவரின் அச்சமற்ற அனுகுமுறையை காட்டுகிறது.
யுஏஇ அணிக்கு எதிராக 171 ரன்கள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக அவர் 95 பந்துகளில் 171 ரன்கள் எடுத்தார், அதில் 14 சிக்ஸர்கள் அடங்கும். இது U-19 வரலாற்றில் மிகவும் அழிவுகரமான இன்னிங்ஸ்களில் ஒன்றாகும்.
U19 ஆசிய கோப்பையில் அதிக சிக்சர்கள்
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில் ஒரே போட்டியில் 20 சிக்ஸர்களைக் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை வைபவ் பெற்றார்.
இளையோர் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள்
இளைஞர் ஒருநாள் போட்டிகளில் 60 சிக்ஸர்களுடன், சூர்யவன்ஷி அனைத்து நேரப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல்லில் சதம் அடித்த இளம் வீரர்
14 வயதே ஆகும் வைபவ் சூர்யவன்சி கடந்த ஐபிஎல் சீசனில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல்லில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஐபிஎல்லில் ஒரு இந்தியரின் வேகமான சதம்
2025 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் 35 பந்துகளில் சதம் அடித்து, யூசுப் பதானின் நீண்டகால சாதனையை முறியடித்தார். இதுவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிவேகமாக அடித்த சதம் ஆகும்.
ஐபிஎல்லில் இரண்டாவது வேகமான சதம்
2025 ஐபிஎல் சீசனில் வைபவ் சூர்யவன்சி 35 பந்தில் சதம் அடித்தார். இது ஐபிஎல்லில் அடிக்கப்பட இரண்டாவது வேகமான சதம் ஆகும். முன்னதாக கிறிஸ் கெயில் 30 பந்தில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்
ஒரே ஐபிஎல் இன்னிங்ஸில் வைபவ் 11 சிக்ஸர்களை விளாசி, முரளி விஜய்யின் சாதனையை சமன் செய்து, இந்த மைல்கல்லை எட்டிய இளைய இந்தியர் ஆனார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமாக சதம் அடித்த இரண்டாவது வீரர்
விஜய் ஹசாரே டிராபியில் இவர் 36 பந்தில் சதம் அடித்தது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொடுத்தது.
சீனியர் டி20 சதம் அடித்த இளைய வீரர்
சீனியர் டி20ல் வைபவ் சூர்யவன்சி சதம் அடித்தது, இதுவரை எந்த ஒரு இளம் வீரரும் செய்யாத சாதனையாக மாறியது.
About the Author
R Balaji