2025இல் ஷாக் கொடுத்த இந்த 11 வீரர்கள்… ஓய்வுபெற்ற இந்தியர்கள் யார் யார்?

2025 Retired Indian Cricketers: 2025ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கே சிறப்பான ஆண்டு எனலாம். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பிறகு வென்றது. ஐபிஎல் தொடரின் 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்கா அணி கைப்பற்றியது. ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி வென்றது. 

Add Zee News as a Preferred Source

அதேநேரத்தில் 2025ஆம் ஆண்டில் இந்திய அணியில் பல ஷாக்கிங் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. பல முக்கிய இந்திய  வீரரகள் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் சரி, குறிப்பிட்ட ஒரு பார்மட்டில் இருந்தும் சரி ஓய்வை பெற்றுள்ளனர். 

விராட் கோலி (Virat Kohli)

விராட் கோலி (37) ஏற்கெனவே டி20ஐ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் திடீரென டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வுபெற்றார். இது இந்திய ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலகளவில் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மே 12ஆம் தேதி விராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 

ரோஹித் சர்மா (Rohit Sharma)

விராட் கோலி போல் ரோஹித் சர்மாவும் (38) இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் ஐபிஎல் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, டெஸ்ட் தொடரில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் மே7ஆம் தேதி அன்று டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவரும் ஏற்கெனவே தனது தலைமையில் இந்திய அணி 2024இல் டி20 உலகக் கோப்பையை வென்ற உடன் டி20ஐ போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

சதேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara)

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்டர்கள் யார் என லிஸ்ட் போட்டால், அதில் நிச்சயம் புஜாரா (37) இல்லாமல் இருக்காது. 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவே இல்லை. ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெற்றார்.

விருத்திமான் சாஹா (Wridhaman Saha)

2024-25 உள்நாட்டு போட்டிகள் நிறைவடைநத பின்னர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் விருத்திமான் சாஹா (41)கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வுபெற்றார். இவர் கடைசியாக 2021ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். அதன்பின் அவர் சர்வதேச கிரிக்கெட் பக்கம் வரவே இல்லை. வங்காள அணிக்காக உள்நாட்டு தொடர்களில் விளையாடி வந்தார். 

வருண் ஆரோன் (Varun Aaron)

வருண் ஆரோன் (36) கடைசியாக 2015ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின் தொடர்ந்து உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார். விஜய் ஹசாரே தொடரில் இருந்து ஜார்க்கண்ட் வெளியேறியதை தொடர்ந்து, கடந்த ஜனவரியில் இவர் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். 

அமித் மிஸ்ரா (Amit Mishra)

இந்திய லெக் ஸ்பின்னரான அமித் மிஸ்ரா (42) கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் கடைசியாக 2017ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாடினார். தொடர்ந்து ஐபிஎல் தொடர்களில் விளையாடி வந்தார், இனி அதிலும் விளையாட மாட்டார். 

பியூஷ் சாவ்லா (Piyush Chawla)

இந்தியாவின் மற்றொரு லெக் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லா () கடந்த ஜூன் 6ஆம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். சிறுவயதில் இருந்தே இந்திய அணியில் விளையாடி வரும் இவர் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடியவர். இவர் கடைசியாக 2012ஆம் ஆண்டில் இந்திய அணியில் விளையாடினார். 

மோகித் சர்மா (Mohit Sharma)

மோகித் சர்மா (37) இவர் ஐபிஎல் மினி ஏலத்திற்கு சில தினங்களுக்கு முன், அதாவது டிசம்பர் 3ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தார், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் கடைசியாக 2015ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாடினார். 

ரிஷி தவான் (Rishi Dhawan)

ரிஷி தவான் (35) கடந்த ஜனவரியில் ஓடிஐ மற்றும் டி20ஐ போட்டிளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். இவர் கடைசியாக 2016ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். ஹிமாச்சல் அணிக்காக உள்நாட்டு போட்டிகளை விளையாடி வந்த இவர், தற்போது உலகளவில் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார். 

கிருஷ்ணப்பா கௌதம் (Krishnappa Gowtham)

2021ஆம் ஆண்டின் ஐபிஎல் மினி ஏலத்தில் கிருஷ்ணப்பா கௌதமை (37) சிஎஸ்கே ரூ.9.5 கோடிக்கு எடுத்தது. அதே ஆண்டில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.  2023ஆம் ஆண்டுவரை உள்நாட்டு கிரிக்கெட்டிலும், 2024ஆம் ஆண்டுவரை ஐபிஎல் தொடரிலும் விளையாடினார். இவர் நேற்று முன்தினம் தனது ஓய்வை அறிவித்தார்.’

ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin)

ரவிசந்திரன் அஸ்வின் (39) இவர் கடந்தாண்டே சர்வதேச போட்டிகளில் இருந்தும் விடைபெற்றாலும், கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கம்பேக் கொடுத்தார். இருப்பினும் அது சரியான சீசனாக அமையாத நிலையில், இவர் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். இருப்பினும் உலகம் முழுவதும் நடைபெறும் மற்ற டி20 தொடர்களில் விளையாட அஸ்வின் ஆர்வம் காட்டி உள்ளார். 

மேலும் படிக்க | ரிங்கு சிங், இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் இடமிருக்கா? கேப்டன் சூர்யகுமார் பதில்!

மேலும் படிக்க | மீண்டும் அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேரும் கில்! வெளியானது அறிவிப்பு!

மேலும் படிக்க | உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு.. கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு சம்பள உயர்வு: BCCI அதிரடி

.

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.