`உன் சிரிப்பை காணமுடியவில்லை' – ஜாக்குலினுக்கு 'லவ்நெஸ்ட்' அமெரிக்க சொகுசு பங்களா பரிசளித்த சுகேஷ்?

டெல்லி தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி ரூ.100 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் இப்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது சிறையில் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தினார். அதோடு சிறைக்கு மாடல் அழகிகள், நடிகைகளை வரவைத்து பரிசுப்பொருள்களை வழங்கினார். பரிசுப்பொருள்களை பெற்றதில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். ஜாக்குலினுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பரிசாக கொடுத்துள்ளார்.

இதனால் ஜாக்குலின் பெர்னாண்டஸை சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவு குற்றவாளியாக சேர்த்திருக்கிறது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், டெல்லி போலீஸார் ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் பல முறை விசாரணை நடத்தி இருக்கின்றனர்.

சிறையில் இருந்தாலும் சுகேஷ் அடிக்கடி ஜாக்குலினுக்கு எதாவது பரிசு கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அதோடு சிறையில் இருந்தவாறு ஜாக்குலினுக்கு கடிதமும் எழுதிக்கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்பு சொகுசு படகு போன்ற பல பரிசுபொருள்களை ஜாக்குலினுக்கு சுகேஷ் கொடுத்துள்ளார். அதோடு சுகேஷ் பரோலில் வந்திருந்தபோது அவரை தனி விமானத்தில் சென்னை சென்று பார்த்துவிட்டு வந்தார் ஜாக்குலின். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு சிறப்பு பரிசு ஒன்றை சுகேஷ் வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக சுகேஷ் ஜாக்குலினுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ”கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் பேபி. இது எப்போதும் உன்னுடனான விசேஷமான தருணங்கள் மற்றும் அனுபவங்களை மட்டுமே எனக்கு நினைவூட்டும் பண்டிகையாகும்.

இது எப்போதும் நிஜமாகவே மறக்க முடியாதது. இந்த சிறப்பான நாளில் உனது சிரிப்பை என்னால் காண முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. பேபி, இந்த அழகான, புகழ்பெற்ற நாளில், பெவர்லி ஹில்ஸில் உனது புதிய, நமது புதிய வீடான “தி லவ் நெஸ்ட்” ஐ உனக்கு பரிசளிக்கிறேன். ஆமாம் அன்பே, உனக்காகவும், நமக்காகவும் நான் கட்டிக் கொடுத்த அதே வீடு. பேபி, நான் உனக்காக வீட்டைக் கட்டி முடித்தேன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

இன்று கிறிஸ்துமஸ் தினத்தன்று தருகிறேன். பேபி, நாம் முன்பு திட்டமிட்டதை விட இது பெரியது மற்றும் சிறந்தது. வீட்டிற்கு வெளியில் கோல்ப் மைதானம் ஒன்றும் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். பெவர்லி ஹில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் ஆடம்பர நகரமாகும். சுகேஷ் இது போன்று கடிதம் எழுதுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று ஜாக்குலின் டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.