அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசின் 5 குட் நியூஸ்

நாட்டின் நிர்வாகத்தை வெளிப்படையாகவும், பொதுமக்களுக்கானதாக மாற்றும் நோக்கில், ஐந்து புரட்சிகரமான டிஜிட்டல் சீர்திருத்தங்களை மத்திய அறிமுகப்படுத்தியுள்ளது. “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் ‘நல்லாட்சி தினம்’ கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் நடைபெற்ற ‘2025 நல்லாட்சி நடைமுறைகள்’ குறித்த தேசிய கருத்தரங்கில், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த 5 முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

Add Zee News as a Preferred Source

1. முன்னாள் ராணுவத்தினர் இடஒதுக்கீடு கையேடு (Ex-Servicemen Reservation Compendium)

நாட்டின் எல்லைகளைக் காத்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடு தொடர்பான அனைத்து விதிமுறைகளும் இப்போது ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பல்வேறு அமைச்சகங்களில் சிதறிக்கிடந்த விதிகள் இனி ஒரே டிஜிட்டல் கையேடாகக் கிடைக்கும். இதன் மூலம் குழப்பங்கள் நீங்கி, முன்னாள் ராணுவத்தினர் தங்களுக்குரிய வேலைவாய்ப்புச் சலுகைகளைத் தாமதமின்றிப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2. AI மூலம் ஆள்சேர்ப்பு விதிகள் 

அரசுப் பணிகளுக்கான ஆள்சேர்ப்பு விதிகளை (Recruitment Rules) உருவாக்குவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இந்த AI கருவி அதிகாரிகளிடம் எளிய கேள்விகளைக் கேட்டு, அதற்குப் பொருத்தமான விதிமுறைகளைத் தானாகவே தயார் செய்து வழங்கும். இதனால் அமைச்சகங்களுக்கு இடையேயான கோப்பு பரிமாற்றங்கள் குறைந்து, காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும்.

3. இ-ஹெச்ஆர்எம்எஸ் 2.0 மொபைல் ஆப்

அரசு ஊழியர்களின் மனிதவள மேலாண்மை சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் ‘e-HRMS 2.0’ தளத்தின் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பதவி உயர்வு, இடமாற்றம், விடுமுறை விண்ணப்பம் மற்றும் பயிற்சி விவரங்களை அரசு ஊழியர்கள் இனி தங்கள் ஸ்மார்ட்போன் மூலமே பார்த்துக்கொள்ளலாம். இது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.

4. கர்மயோகி iGOT AI தளங்கள்

‘மிஷன் கர்மயோகி’ திட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகளின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் AI வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

AI சாரதி (Sarthi): அதிகாரிகளுக்குத் தேவையான கல்வி வளங்களைக் கண்டறிய உதவும்.

AI கற்கும் தளம்: இதன் மூலம் ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளை உருவாக்க முடியும். இது நிர்வாகத் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்தும்.

5. டிஜிட்டல் கற்றல் ஆய்வகம் 2.0 (Karmayogi Digital Learning Lab 2.0)

அதிநவீன தொழில்நுட்பங்களான AR/VR (Augmented Reality/Virtual Reality) மற்றும் கேமிஃபிகேஷன் (Gamification) மூலம் கற்கும் முறையை இந்த ஆய்வகம் வழங்குகிறது. சிக்கலான அரசு நடைமுறைகளை அதிகாரிகள் மிக எளிதாகப் புரிந்துகொள்ளவும், களப்பணியில் சிறந்த முறையில் செயல்படவும் இந்தப் பயிற்சி ஆய்வகம் உதவும்.

அமைச்சர் ஜிதேந்திர சிங் உரை

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங், “நல்லாட்சி என்பது வெறும் சொல்லல்ல, அது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த தினசரி கடமை. 2014-க்கு பிறகு பிரதமர் மோடியின் தலைமையில் நல்லாட்சி என்பது மக்களின் வீட்டு வாசலுக்கே வந்துள்ளது. இந்த 5 டிஜிட்டல் சீர்திருத்தங்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகார வர்க்கத்தையும், சாமானிய மக்களையும் இணைக்கும் ஒரு பாலமாக அமையும்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.