Bhashini app : பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபகாலமாக தனது உரைகளை நிகழ்த்தும்போது, ஒரு மேஜிக் நடப்பதை கவனித்தீர்களா? அவர் ஹிந்தியில் பேசப் பேச, மேடைக்கு முன்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு அவர்களின் தாய்மொழியிலேயே அந்த உரை கேட்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் அந்த ரகசியம்தான் ‘பாஷினி’ (Bhashini) ஏஐ செயலி. இந்தியாவின் மொழித் தடைகளை உடைக்க வந்த இந்த அற்புதச் செயலி, இப்போது சாமானிய மக்களின் பயன்பாட்டிற்கும் கிடைக்கிறது. இதை எப்படி பயன்படுத்துவது? இதில் என்னென்ன ஸ்பெஷல்? இதன் முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
Add Zee News as a Preferred Source
பாஷினி செயலி:
மொழி தடைகளை போக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த செயலி. 22 இந்திய மொழிகளை ஆதரிக்கும் இந்த செயலி, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது.
பயன்படுத்துவது எப்படி?
1. இன்ஸ்டால் செய்தல்: முதலில் உங்கள் போனில் ‘Bhashini’ ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள். உள்ளே சென்றதும் உங்கள் தாய்மொழியை, உதாரணமாக தமிழ் என்றால் அதனை தேர்ந்தெடுத்து லாக்-இன் செய்துகொள்ளுங்கள்.
2. ‘கான்வர்ஸ்’ (Converse) வசதி – நேருக்கு நேர் பேசலாம்: நீங்கள் ஒரு ஹிந்தி காரரிடமோ அல்லது ஆங்கிலம் பேசுபவரிடமோ பேச வேண்டும் என்றால், ‘Converse’ ஆப்ஷனை கிளிக் செய்யவும். ஒரு பக்கம் உங்கள் மொழி தமிழ், மறுபக்கம் அவர் மொழி ஹிந்தியை தேர்வு செய்யவும். நீங்கள் தமிழில் பேசினால், அது அவருக்கு ஹிந்தியில் கேட்கும். அவர் ஹிந்தியில் சொன்னால், உங்களுக்குத் தமிழில் புரியும்.
3. போர்டுகளை வாசிக்கலாம்: தெரியாத ஊருக்குப் போகும்போது அங்குள்ள போர்டுகள் புரியவில்லையா? கவலை வேண்டாம். இந்த ஆப்பில் உள்ள கேமராவை ஆன் செய்து அந்த போர்டைப் படம் பிடித்தால், அதில் உள்ள எழுத்துக்கள் அப்படியே தமிழாக மாறி உங்கள் மொபைல் திரையில் தோன்றும்.
4. ‘வாய்ஸ்’ (Voice) மற்றும் ‘டெக்ஸ்ட்’ (Text): நீண்ட செய்திகளை டைப் செய்தோ அல்லது வாய்ஸ் மெசேஜ் மூலமாகவோ உடனுக்குடன் மொழிபெயர்க்க இந்த வசதி உதவுகிறது.
ஏன் இந்த ஆப் இவ்வளவு ஸ்பெஷல்?
* மற்ற மொழிபெயர்ப்பு கருவிகளை விட இது மிக வேகமாக (Real-time) செயல்படுகிறது.
* இது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செயலி என்பதால் தரவுகள் பாதுகாப்பானவை.
கிராமப்புற மக்களுக்கும் ஏதுவானது: எழுத்து அறிவு இல்லாதவர்கள் கூட குரல் வழி (Voice) மூலமாக இதைப் பயன்படுத்த முடியும்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More