விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய்.
இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் விவேக், ” நான் ‘ஜனநாயகன்’ படத்தில் ஐந்து பாடல்களை எழுதியிருக்கிறேன்.
அனைத்து பாடல்களையும் நான் அட்லீ – அல்லு அர்ஜூன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது எழுதினேன்.

என்னுடைய வேலையைப் புரிந்துக் கொண்டு இரண்டு படங்களிலும் வேலை பார்க்க இடம் கொடுத்ததற்கு நன்றி.
நான் பாடல்கள் மூலம் அவரை Elevate செய்யவில்லை. அவரே Elevation தான்! இந்தப் படத்தில் நான் எழுதியிருக்கும் மற்றுமொரு Elevation பாடலும் வரவிருக்கிறது.” என்றார்.