Airtel Recharge Plans: நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், பல முக்கிய ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதுடன் பிராட்பேண்ட் பயனர்களை மனதில் கொண்டு அற்புதமான திட்டங்களையும் அதன் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துள்ளது. இந்த பிராட்பேண்ட் திட்டங்களில் அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இவற்றில் அழைப்பு வசதியும் உள்ளது. இது தவிர, பொழுதுபோக்குக்காக பல OTT சந்தாக்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
இந்நிலையில் இன்று நாம் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் தேடலில் ஏர்டெல் நிறுவனத்தின் இரண்டு சிறப்பு பிராட்பேண்ட் திட்டங்களைப் பற்றி தான் காணப் போகிறோம். இந்த இரண்டு திட்டங்களிலும் 100Mbps வேகத்தில் டேட்டா வசதியுடன், 22க்கும் மேற்பட்ட OTT செயலிகள் மற்றும் டிவி சேனல்களும் வழங்கப்படுகின்றன.
ரூ.699 பிராட்பேண்ட் திட்டம்
ஏர்டெல்லின் ரூ. 699 பிராட்பேண்ட் திட்டம் 40 Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் லேண்ட்லைன் மூலம் அன்லிமிடெட் அழைப்பு வசதியை வழங்குகிறது. இத்திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) வழியாக ZEE5 உள்ளிட்ட பல OTT தளங்களுக்கான அணுகல் மற்றும் ரூ. 350 மதிப்புள்ள டிவி சேனல்கள் பேக் ஆகியவை அடங்கும். கூடுதலாக, கூகிள் ஒன் (Google One) மூலம் 100GB கிளவுட் சேமிப்பு வசதி கிடைக்கிறது. இருப்பினும், இதில் பெர்ப்ளெக்ஸிட்டி புரோ (Perplexity Pro) AI அம்சம் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விலை: ரூ. 699 + ஜிஎஸ்டி (GST).
வேகம்: 40 Mbps வரை பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகம்.
தரவு (Data): வரம்பற்ற இணைய தரவு (FUP வரம்பு 3.3 TB வரை).
அழைப்புகள்: லேண்ட்லைன் மூலம் இந்தியா முழுவதும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி (STD) அழைப்புகள்.
டிவி சேனல்கள்: ரூ. 350 மதிப்புள்ள 350+ டிவி சேனல்கள்.
Disney+ Hotstar: ஓராண்டு சந்தா.
Airtel Xstream Play: 20-க்கும் மேற்பட்ட OTT தளங்களின் அணுகல் (SonyLiv, Lionsgate Play, Chaupal போன்றவை).
Apollo 24|7 Circle: சந்தா பலன்கள்.
Google One: 100GB கிளவுட் ஸ்டோரேஜ்.
ரூ.899 பிராட்பேண்ட் திட்டம்
ஏர்டெல்லின் ரூ. 899 பிராட்பேண்ட் திட்டம் 100 Mbps வேகத்தில் வரம்பற்ற இணையத் தரவு மற்றும் லேண்ட்லைன் மூலம் வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்குகிறது. இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, சுமார் ₹17,000 மதிப்புள்ள பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ (Perplexity Pro) AI சந்தா ஒரு வருடத்திற்கு இலவசமாகக் கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே மூலம் ZEE5 உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட OTT தளங்கள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களைப் பார்க்கும் வசதியும் இதில் அடங்கும். மேலும், 100GB கூகிள் ஒன் (Google One) கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் அப்பல்லோ 24|7 நன்மைகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
விலை: ரூ. 899 + ஜிஎஸ்டி (GST).
வேகம்: 100 Mbps வரை அதிவேக இணையம்.
தரவு (Data): வரம்பற்ற இணைய தரவு (FUP வரம்பு 3.3 TB வரை).
அழைப்புகள்: லேண்ட்லைன் மூலம் இந்தியா முழுவதும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி (STD) அழைப்புகள்.
டிவி சேனல்கள்: ரூ. 350 மதிப்புள்ள 350+ டிவி சேனல்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இரண்டு பிராட்பேண்ட் திட்டங்களும் எங்கே கிடைக்கும்?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பிராட்பேண்ட் திட்டங்களும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ரூ.121 மற்றும் ரூ.181 ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
About the Author
Vijaya Lakshmi