இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீர் வந்த பின்னர் சுப்மன் கில் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை கண்டார். ரோகித் சர்மாவின் ஓய்வுக்கு பின்னர் டெஸ்ட் அணியை வழிநடத்தும் வாய்ப்பு, ஒருநாள் கேப்டனாக இருந்த ரோகித்தை நீக்கிவிட்டு அப்பதவிக்கு சுப்மன் கில் வந்தார். ஜக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பைக்கு முன்பாக டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவி, அதோடு ஓர் ஆண்டு இடைவெளிக்கு பின்னர் தொடக்க வீரருக்கான இடமும் கிடைத்தது என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் முன்னேற்றம் கண்டார் சுப்மன் கில்.
Add Zee News as a Preferred Source
Shubman Gill: முன்று வடிவ கிரிக்கெட்டிலும் உச்சம் பெற்ற சுப்மன் கில்
மூன்று விடிவ கிரிக்கெட்டிலும் தன்னக்கான இடத்தை பிடித்துக்கொண்ட சுப்மன் டி20 கிரிக்கெட்டில் அதனை தக்க வைக்க தவறினார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய அவர் டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டு முழுவதும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஒரு மோசமான ஃபார்மில் இருந்தார் என்றே சொல்ல வேண்டும். இதன் காரணமாக அதிருப்தி அடைந்த இந்திய அணி நிர்வாகம் வரும் 2026 டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து அவரை நீக்கியது. பலரும் சுப்மன் கில்லின் மோசமான ஃபார்ம் தான் இந்த நீக்கத்திற்கு காரணம் என பேசிக்கொண்டிருக்கையில், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சுப்மன் கில் சிறந்த வீரர் அணியின் காம்பினேஷனை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளோம் என கூறினார்.
Indian Team Selection Committee Chairman Ajit Agarkar: தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
இந்த நிலையில், டி20 அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட சுப்மன் துணை கேப்டன் பதவில் இருந்து நீக்கியது ஏன்? அக்சர் பட்டேலை மீண்டும் அப்பதவியில் அமர வைத்தது ஏன் என்ற விளக்கத்தை அளித்துள்ளார் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர்.
Why Axar Patel is back as vice-captain: அக்சர் படேலுக்கு ஏன் மீண்டும் துணை கேப்டன் பதவி
இது தொடர்பாக பேசிய அவர், முதலில் சுப்மன் கில்லை டி20 அணியின் துணை கேப்டனாக அறிவித்தது அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்துதான். ஆனால் தற்போது அவர் அணியில் இல்லை. இதற்கு மோசமான பேட்டிங் ஃபார்ம் மற்றும் அணியின் காம்பினேஷன் தான் காரணம். அதனாலேயே அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கப்பட்ட பின்னர் அவரது பதவிக்கு ஒருவரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் ஏற்கனவே துணை கேப்டனாக இருந்த அக்சர் படேலை தேர்வு செய்தோம். சுப்மன் கில் டி20 அணியில் இல்லாத சமயத்தில் அக்சர் படேல்தான் துணை கேப்டனாக இருந்தார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் துணை கேப்டனாக செயல்பட்டிருந்தார்.
அதனாலேயே நாங்கள் அக்சர் படேலுக்கு மீண்டும் துணை கேப்டன் பதவியை வழங்கினோம். மேலும், டி20 உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியே ஜனவரியில் நடக்கும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறினார்.
India Squad For T20 World Cup: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
About the Author
R Balaji