"இந்த 28 வருடங்களில் நான் பார்த்த பொக்கிஷம் ரஞ்சித் தான்" – புகழ்ந்து பேசிய மிஷ்கின்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது.

அந் தவகையில் நேற்று (டிச. 29) மிஷ்கின் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்.

இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், “இந்த சினிமாவில் 28 வருடங்களாக இருக்கிறேன்.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

ஒவ்வொரு நாளும் இரண்டு சல்லடைகளால் நான் மனிதர்களை சல்லடை போட்டு பார்க்கிறேன்.

அதில் முதல் சல்லடை ஆளுமை. அந்த ஆளுமை என்ற சல்லடையில் போட்டு சலித்துப் பார்த்ததில் நான் ஆச்சர்யப்பட்டு பார்த்த நபர்கள்… கமல் சார், பி.சி ஸ்ரீராம், நாசர், இளையராஜா.

இவர்களை எல்லாம் மிகப்பெரிய ஆளுமைகளாகப் பார்த்திருக்கிறேன்.

இந்த மனிதர்கள் எப்பொழுதும் என்னை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

இன்னொரு சல்லடை அறம். அந்த அறத்தில் போட்டு நான் சலித்துப் பார்த்ததில் இருந்த ஒரே மனிதன் இந்த ரஞ்சித்தான்.

அவரின் தாய் வயிற்றில் பிறந்த மூத்த மகன் நான். இளைய மகன் ரஞ்சித். என் சினிமாவில் அறிவான நபர்களை நான் பார்த்திருக்கிறேன்.

அழுக்கான மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அதில் உண்மையான மனிதர்கள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன்.

மிஷ்கின்
மிஷ்கின்

அதில் முதல் நபராக ரஞ்சித்தை தான் சொல்வேன். இந்த 28 வருடத்தில் நான் பார்த்த பொக்கிஷம் இந்த ரஞ்சித்.

என்னுடைய அலுவலகத்துக்கு வரும்போதெல்லாம் அவனுடைய சக உறவுகளுக்கும், குடும்பங்களுக்கும் என்ன பண்ண வேண்டும் என்பதை மட்டும் தான் பேசுவார்.

ஒரு காசிப் (Gossip) கூட பேசமாட்டார். அவர் பேசுவது எல்லாம் அறம் தான். ரஞ்சித் ஒரு மார்ட்டின் லூதர் கிங்” என்று மிஷ்கின் ரஞ்சித் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.