Chennai Super Kings Latest News: தென்னாப்பிரிக்கா டி20 தொடர் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் தர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் மோதி வருகின்றன. இதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சகோதர ஆணியாகும். இந்த அணி தனது முதல் போட்டியாக பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.
Add Zee News as a Preferred Source
டாஸ் வென்ற கேசவ் மகராஜ் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது. இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட ஆல் ரவுண்டர் அகீல் ஹொசைன் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
SA20 CSK Player Akeal Hosein Performance: SA20ல் கலக்கிய சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இவர் பேட்டிங்கில் 10 பந்துகளில் 22 ரன்களை குவித்து அசத்தியது மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரரான வில் ஸ்மீட் விக்கெட்டையும் எடுத்தார். தனது அணி தடுமாறிய நிலையில், கடைசி நேரத்தில் 22 ரன்கள் குவித்து உறுதுணையாக இருந்த அகீல் ஹொசைன் எதிரணி பேட்டிங் செய்தபோது விக்கெட் எடுத்து வெற்றிக்கு அச்சாரம் போட்டார்.
அப்போட்டியில் மிகவும் கவனமாகவும் துல்லியமாகவும் பந்து வீசிய ஹொசன் 3 ஓவர்கள் வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இவரது செயல்பாடு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை 22 ரன்களில் வெற்றி பெற பெறுதவியாக இருந்தது.
Replacement For Ravindra Jadeja: ஜடேஜாவுக்கு மாற்று வீரர் இவர்தான்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர் மற்றும் தோனிக்கு பின் ஒரு தரமான விக்கெட் கீப்பரையும் தேடி வந்தது. இந்த சூழலில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற விரும்பிய சஞ்சு சாம்சனை அந்த அணியிடம் பேசி ரூ. 18 கோடிக்கு வாங்கியது. பதிலுக்கு ரவீந்திர ஜடேஜாவை கேட்டை நிலையில், அதற்கு ஒப்புக்கொண்டு அவரை அந்த அணிக்கு விற்றது. இதனால் ஜடேஜாவின் இடம் காலியாக இருந்தது. அவரது இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி நிறப்பப்போகிறது என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், அகீல் ஹொசைன் 10 பந்தில் 22 ரன்களையும் 1 விக்கெட்டையும் எடுத்து அசத்தி இருக்கிறார். அகீல் ஹொசைன் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணியால் ரூ. 2 கோடிக்கு வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ravichandran Ashwin Prises Akeal Hosein: ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு
அகீல் ஹொசைனின் இந்த அசத்தலான செயல்பாட்டை பார்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, அகீல் ஹொசைன் அகேல் ஹொசைன் அனைத்தையும் செய்கிறார். பேட்டிங்கில் உறுதியான பங்களிப்பு, பந்துவீச்சில் சிக்கனம். JSK அணியில் கச்சிதமாக பொருந்தி உள்ளார். உண்மையான இம்பாக்ட் பிளேயர் என்றால் இவர்தான் என பதவிட்டுள்ளார்.
CSK Full Squad For 2026 IPL: 2026 ஐபிஎல்லுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அகீல் ஹொசைன், பிரசாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ்.
About the Author
R Balaji