T20 World Cup: கில், ஜிதேஷ் சர்மா நீக்கம்.. ரிங்கு சிங் தேர்வில் அரசியல் – பின்னணி என்ன?

2026 T20 World Cup: 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அணி அறிவிப்பில் பல அதிர்ச்சிகரமான செய்திகள் ரசிகரகளுக்கு காத்திருந்தன. சுப்மன் கில்லை துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கயதோடு அணியில் இருக்கும் தூக்கி எறிந்தனர். ரிங்கு சிங் தேர்வு, இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஜிதேஷ் சர்மா, ஜெய்ஸ்வால் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சனின் இடம் உறுதியானது போன்ற பல அதிர்ச்சிகள் இந்த அணியில் இருந்தன. 
Politics In Indian Team Selection: இந்திய அணி தேர்வில் அரசியல் 

Add Zee News as a Preferred Source

இந்த அணி தேர்வை பலரும் பாராட்டி வந்தாலும் சில இதற்கு பின்னால் அரசியல் இருப்பதாக கூறி வருகின்றனர். அதாவது, முதலில் இந்திய அணியை தேர்வு செய்யும்போது ரிங்கு சிங்கின் பெயர் லிஸ்ட்டிலேயே இல்லையாம். பின்னர் அரசியல் அழுத்தம் காரணமாக அவரது பெயர் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த அரசியல் பிரமுகரின் பெயர் அடிபடுகின்றன. ரிங்கு சிங் மற்றும் பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஆகிய இருவரும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அதேபோல் ராஜீவ் சுல்லா காங்கிரஸ் கட்சியில் உள்ளார். அதோடு ரிங்கு சிங்கின் வருங்கால மனைவி பிரியா சரோஜ், சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 

Shubman Gill, Jitesh Sharma & Yashasvi Jaiswalகில், ஜிதேஷ், ஜெய்ஸ்வால் நீக்கம்

முன்னதாக ஆசிய கோப்பை தொடரிலும் ரிங்கு சிங்கின் பெயர் வலுகட்டாயமாக சேர்க்கப்பட்டதாகவே கூறப்படுகிறது. தற்போது வரும் 2026 டி20 உலகக் கோப்பையிலும் அது நடந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. ரிங்கு சிங்கின் விஷயத்தில் அரசியல் தலையீடு இருந்து அவரது பெயர் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயத்தைன் காரணமாகவே சுப்மன் கில், ஜிதேஷ் சர்மா, ஜெய்ஸ்வால் போன்றோரின் பெயர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ரிங்கு சிங் ஃபினிஷர் என்பதால் அவரை சேர்க்க ஜிதேஷ் சர்மாவின் பெயரை தூக்க வேண்டி இருந்தது. ஜிதேஷ் சர்மாவை தூக்கினால் அணிக்கு மற்றொரு விக்கெட் கீப்பர் தேவை. அதன் காரணமாக இஷான் கிஷனை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. தொடக்க வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் இஷான் கிஷன் இருப்பதால் சுப்மன் கில்லை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. 

Rinku Singh T20 Stats: டி20 கிரிக்கெட்டில் ரிங்கு சிங் 

என்னதான் ரிங்கு சிங் விஷயத்தில் அரசியல் தலையீடு இருக்கிறது என்று பேசப்பட்டு வந்தாலும் அவரது புள்ளிவிவரங்கள் அவர் தகுதியானவர் என கூறுகிறது. அது அவருக்கு சாதகமாக உள்ளது. இதுவரை 35 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள ரிங்கு சிங் 550 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 42.30ஆக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட்  161.76ஆக உள்ளது. ஆனால் இவரை போல மற்ற வீரர்களின் புள்ளி விவரங்கள் இல்லை ஜிதேஷ் சர்மா மிகவும் குறைவான டி20 போட்டிகளிலேயே விளையாடி இருக்கிறார். சுப்மன் கில்லின் டி20 ஃபார்ம் படுமோசமாக உள்ளது. அதுபோக அவரது சராசரியும் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவு இல்லை. 

மொத்தத்தில் இந்திய அணி தேர்வில் அரசியல் புள்ளிகளின் தலையீடுகள் இருக்கின்றன என்று பேசப்பட்டு வந்தாலும், உண்மையில் என்ன நடந்தது என்பது பிசிசிஐ தேர்வுக்குழு மட்டுமே தெரியும். 

India Squad For T20 World Cup: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.