"சிறுவர்களின் அந்த அரக்கத்தனமான அருவருப்பான செயல் மன உளைச்சலை கொடுக்கிறது"- மாரி செல்வராஜ்

திருத்தணி ரயில் நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை (டிச. 30) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் குரல் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Represental Images
Represental Images

” புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது.

கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.