சூர்யகுமார் யாதவ் என்னுடன் தொடர்பில் இருந்தார் – பிரபல நடிகை குற்றச்சாட்டு!

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை பற்றி பெரிதாக புகார்கள் இல்லாத நிலையில், பாலிவுட் நடிகை மற்றும் மாடல் குஷி முகர்ஜி ஒரு அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார். சூர்யகுமார் யாதவ் அடிக்கடி தனக்கு மெசேஜ் அனுப்புவார் என்று கூறியுள்ளார். இந்த தகவல் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடித்த குஷி முகர்ஜி சமீபத்திய நிகழ்வில் செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் சூர்யகுமார் யாதவ் தன்னுடன் அடிக்கடி தொடர்பு கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர்களுடன் டேட்டிங் குறித்து கேட்டபோது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

கிரிக்கெட் வீரருடனும் டேட்டிங்

“நான் எந்த கிரிக்கெட் வீரருடனும் டேட்டிங் செய்ய விரும்பவில்லை. பல கிரிக்கெட் வீரர்கள் என்னை தொடர்பு கொள்கின்றனர். சூர்யகுமார் யாதவ் முன்பு எனக்கு நிறைய மெசேஜ் அனுப்பி வந்தார்” என்று குஷி முகர்ஜி தெரிவித்துள்ளார். தற்போது தங்களுக்கு இடையே அதிகம் பேச்சுவார்த்தை இல்லை என்றும், எந்த கிரிக்கெட் வீரருடனும் தன்னை இணைத்து பார்க்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இப்போது நாங்கள் அதிகம் பேசுவதில்லை, நான் யாருடனும் தொடர்புபடுத்தப்பட விரும்பவில்லை. என்னை சம்பந்தப்படுத்தி எந்த வதந்திகளும் வருவதற்கு நான் விரும்புவதில்லை” என்று தெளிவுபடுத்தினார்.

Khushi Mukherjee said that Suryakumar Yadav used to message he

She Said: Suryakumar Yadav used to message me a lot. But maybe we don’t talk much now, and I don’t even want to get associated. I don’t like any link-ups with me, so…pic.twitter.com/RWILeCcsXT

— Mention Cricket (@MentionCricket) December 30, 2025

சூர்யகுமாரின் பதில்

நடிகையின் இந்த புகார் குறித்து சூர்யகுமார் யாதவ் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் டி20 கேப்டனாக இருக்கும் அவர், தற்போது தனது கிரிக்கெட் பணியில் கவனம் செலுத்தி வருகிறார். 2024 ஜூலையில் ஹார்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக டி20 கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார், அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். சூர்யகுமார் யாதவ் 2016 ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று தேவிஷா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். மும்பையில் நடைபெற்ற இந்த திருமணம் பாரம்பரிய முறைப்படி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. இருவரும் 2012 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களாக இருந்த போது இருந்தே தொடர்பில் உள்ளனர். தேவிஷா ஷெட்டி ஒரு திறமையான கிளாசிக்கல் நடன கலைஞர் மற்றும் நடன பயிற்சியாளர் ஆவார். 

இந்த ஜோடி அவர்களின் அன்பான உறவுக்காக பரவலாக பாராட்டப்படுகிறது. தேவிஷா அடிக்கடி போட்டிகளின் போது தனது கணவரை ஆதரித்து உற்சாகப்படுத்துவதை காணலாம். சமீபத்தில் இந்த ஜோடி ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்கு சென்று வைகுண்ட ஏகாதசி நாளன்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். சூர்யகுமார் யாதவ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய டி20 தொடரில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி 3-1 என்ற கணக்கில் தொடர் வெற்றியை பெற்றார். 2024 ஜூலையில் ரோஹித் ஷர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் இந்தியாவின் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அடுத்த பணியாக 2026 ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் இந்திய அணிக்கு தலைமை தாங்குவார். இந்த தொடர் பிப்ரவரி 7 அன்று இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கும் டி20 உலக கோப்பைக்கான பயிற்சியாக உள்ளது. இந்தியா 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை இறுதி போட்டியில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. 

சூர்யகுமார் யாதவின் சமீபத்திய ஃபார்ம்

சூர்யகுமார் யாதவின் சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் கவலையளிக்கிறது. 2025 ஆம் ஆண்டில் 17 இன்னிங்ஸ்களில் வெறும் 201 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். டி20 உலக கோப்பைக்கு முன்னதாக அவரது மோசமான ஃபார்ம் அணிக்கு பெரிய கவலையாக மாறியுள்ளது. முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா இதை சுட்டிக்காட்டி, “கேப்டனின் வேலை வெறும் டாஸ் போடுவது மட்டும் அல்ல, அவர் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். நியூசிலாந்து தொடரில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.