ரெனால்ட் இந்தியாவின் அனைத்து மாடல்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கார்களின் விலையில் சுமார் 2 சதவீதம் வரை உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் க்விட், ட்ரைபர், கைகர் போன்ற வாகன உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தற்போதைய பொருளாதாரச் சூழல் காரணமாகவே இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வரும் ஜனவரி 26, 2026 அன்று தனது மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது இந்தியச் சந்தையில் ரெனால்ட் நிறுவனத்திற்குப் புத்துணர்ச்சியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.