தனியார்மயமக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.


இன்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீட்டுக்கு செல்லக்கூடாது என தீர்மானித்து, மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு கூட்டமாக அமர்ந்துவிட்டனர். இரவு 9:45 மணிக்கு மேல் ரிப்பன் பில்டிங் வெளியே அமர்ந்தவர்கள், ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டு வருகின்றனர்.