சென்னை: 2026ம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனநாயகப் போரில் வெற்றிதரும் புத்தாண்டு 2026 என மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மக்களுக்கு நிறைவான சந்தோஷத்தை வழங்கும் ஆண்டாக புத்தாண்டு அமைய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். முதல்வர் ஸ்டாலின்: தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளதாவது, உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து […]