திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) 4 சிறுவர்கள் ஒடிசா இளைஞரை வழிமறித்து கத்தியால் தாக்கி, துன்புறுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
அந்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் பேரரசு இளைஞர்கள் தாக்கிய சம்பவம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். “திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்தான். தற்போது உள்ள சில திரைப்படங்களில் வன்முறை…வன்முறை…வன்முறை மட்டும் தான் இருக்கிறது. சமூகத்தின் மீது அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறதோ அதே அளவு திரைப்பட இயக்குநர்களுக்கும், அதிக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட நடிகர்களுக்கும் வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.