கோமாவில் இருந்த கிரிக்கெட் வீரர்…8 ஆண்டுகளுக்கு பின் உயிரிழப்பு

கொழும்பு

இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ(Akshu Fernando) (வயது 25) வலது கை துடுப்பாட்டக்காரரான பெர்னாண்டோ, 2008 ஆம் ஆண்டில் பாணந்துறை அணிக்காக 23 வயதுக்குட்பட்டோர் போட்டியில் விளையாடியதன் மூலம் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேலும், கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப், பாணந்துறை விளையாட்டுக் கழகம் மற்றும் சிலாவ் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

கடந்த 2018 டிசம்பர் 28 அன்று, மவுண்ட் லவ்னியாவில் கடற்கரையில் பயிற்சி அமர்வின் போது, ரெயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு விபத்தை சந்தித்தார். தலையில் பலத்த காயம் மற்றும் எலும்பு முறிவுகளுடன் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கோமாவிற்கு சென்றதாக கூறப்பட்டது.

அப்போது முதல், உயிர் காக்கும் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்திற்கு முன்னர், இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். அவரின் மறைவிற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.