டிஜிட்டல் தகவல் அதிகரிப்பு: அஞ்சல் சேவையை முழுவதுமாக நிறுத்தியது டென்மார்க் அரசு

கோபன்ஹென்,

டென்மார்க் நாட்டின் அரசு அஞ்சல் சேவை துறை தனது அனைத்து கடித வினியோகங்களையும் இன்றுடன் நிறுத்தி உள்ளது. 400 ஆண்டுகள் பழமையான தனது பொது சேவைகளில் ஒன்றான நாட்டின் அஞ்சல் நிறுவனமான போஸ்ட் நார்ட் தனது இறுதிக்கடித்தை வழங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய கடிதம் வினியோக சேவையை முடிவுக்கு கொண்டு வந்த உலகின் முதல் நாடாக டென்மார்க் உருவெடுத்துள்ளது.

நாட்டு மக்கள் டிஜிட்டல் தகவல் தொடர்புகளை அதிகளவில் நம்பியிருப்பதால் அஞ்சல் சேவைகளில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது.இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து கடித விநியோக அளவுகளில் 90 சதவீதம் சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக 401 ஆண்டுகளுக்கு பிறகு கடித வியோகத்தை நிறுத்தி உள்ளதாக அரசுக்கு சொந்தமான போஸ்ட்நார்ட் உறுதிப்படுத்தியது. கடைசி கடிதங்கள் நேற்று விநியோகிப்பட்டதாகவும், 1624-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அஞ்சல் சேவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே ஜூன் 1-ம் தேடி முதல் நாடு முழுவதும் தற்போது அமைந்துள்ள 1,500 அஞ்சல் பெட்டிகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அனைத்து அஞ்சல் பெட்டிகளும் இன்று அகற்றப்படும்.

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

டென்மார்க்கில் பெரும்பாலான தகவல் தொடர்புகள் டிஜிட்டல் முறையில் நடைபெற்று வருகின்றன. இனி கடிதங்களை அனுப்ப தனியார் நிறுவனங்கள் செயல்படும். சட்டப்படி கடிதங்களை அனுப்பும் உரிமை பாதுகாக்கப்படும். தேவைப்பட்டால் அரசு புதிய நிறுவனங்களை உருவாக்கும். இது டென்மார்க்கில் கடிதபோக்குவரத்து முடிவுக்க் உவருவதை குறிக்கவில்லை மாறாக அதன் விநியோக முறை மாறிவிட்டது என்பதையே காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.