IPL 2026: தோனி ஓய்வுக்கு பின் CSKவில் இந்த பதவிதான் – முழு விவரம்!

MS Dhoni Retirement Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக திகழ்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவர் கடந்த சில சீசன்களாகவே ஓய்வு பெற்றுவிடுவார் என்ற செய்தி ஆண்டுதோறும் உளாவி வருகிறது. தற்போது வரும் ஐபிஎல் 2026 தொடருக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் எம். எஸ். தோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

Dhoni 18 Years IPL Travel: 18 வருட ஐபிஎல் பயணம் 

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பயணித்து வருகிறார் எம்.எஸ், தோனி. இடையில் இரண்டு சீசன்கள் மட்டும் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணீக்காக விளையாடினார். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெண்ற் 5 கோப்பைகளுமே இவரது தலைமையில் வென்றதுதான். இந்த சூழலில், வழக்கம்போல் இந்த ஆண்டும் 2026 ஐபிஎல் தொடருடன் எம். எஸ். தோனி ஓய்வு பெறுகிறார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.  

Robin Uthappa About MS Dhoni Retirement: தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறப்போவது உறுதி 

இந்த நிலையில், 44 வயதாகும் எம். எஸ். தோனி, இந்த ஆண்டுடன் நிச்சயம் ஓட்வை அறிவித்து விடுவார் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் இதுதான். இத்துடன் அவர் ஓய்வு அறிவிப்பது உறுதி. இதற்கு மேல் அவர் நீட்டிப்பதற்கு சிறிதளவு கூட வாய்ப்பில்லை. அவரது ஐபிஎல் பயணமும் இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கான அறிகுறிகளும் தெளிவாக தெரிகின்றன. 

MS Dhoni CSK Position After Retirement: ஓய்வுக்கு பின் இதைதான் செய்வார் 

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்கு அதிக முதலீடு செய்துள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளுக்கான திட்டம். இதன் மூலமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. எனவே நிச்சயமாக இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெறப்போவது உறுதி. வரும் ஆண்டுகளில் சிஎஸ்கே அணி இளம் வீரர்கள் கொண்ட படையுடன் களமிறங்கும். அவர்களை தோனி பின்னால் இருந்து வழிநடத்துவார். ருதுராஜ் கெய்கவாட்டின் தலைமையில் அவர்கள் இன்னொரு ரெய்னா, ஜடேஜாவை உருவாக்க திட்டமிட்டு விட்டனர் என முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா கூறி உள்ளார். 

Dhoni In IPL: ஐபிஎல்லில் தோனி

ஐபிஎல்லில் இதுவரை தோனி 264 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 137.54 ஸ்டைக் ரேட்டுடன் மற்றும் 24 அரை சதங்களுடன் 5243 ரன்களை குவித்துள்ளார். இதில் 226 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 133 வெற்றிகளையும் 91 தோல்விகளையும் சந்தித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

CSK Squad For 2026 IPL: 2026 ஐபிஎல்லுக்கான சிஎஸ்கே அணி 

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அகேல் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், பிரஷாந்த் ஷர்மான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ்.

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.