நியூசிலாந்து ஒருநாள் தொடர்! ருதுராஜ் நீக்கம் – புதிய துணை கேப்டன் அறிவிப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. கடந்த தொடரில் காயம் காரணமாக விலகிய ஷுப்மன் கில் தொடர்ந்து கேப்டனாக தொடர்கிறார். அதே நேரம் துணை கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது காயம் அடைந்த ஸ்ரேயஸ் ஐயர், சென்ட்ரல் ஆஃப் எக்ஸலன்ஸ் தகுதி சான்றிதழுக்கு உட்பட்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக காயத்தில் இருந்து குணமாகி, தொடர் பயிற்சியில் ஈடுபட்ட ஐயர் போட்டி தகுதியை இன்னும் பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

 News 

India’s squad for @IDFCFIRSTBank ODI series against New Zealand announced.

Details  https://t.co/Qpn22XBAPq#TeamIndia | #INDvNZ pic.twitter.com/8Qp2WXPS5P

— BCCI (@BCCI) January 3, 2026

ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்!

ஜனவரி 6 அன்று இமாச்சல பிரதேசத்துக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு பிறகு இறுதி தகுதி பரிசோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடர் ஜனவரி 11ல் தொடங்குவதற்கு முன்பு சில போட்டிகளில் விளையாட இது ஐயருக்கு போதுமான நேரத்தை வழங்கும். மேலும் மொஹமது சிராஜ் ஒருநாள் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளார். கடந்த சில தொடர்களில் இடம் பெறாத அவர், உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். கில், ஐயர் மற்றும் சிராஜ் வருகையால் திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் அணியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பும்ரா ஓய்வு!

ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் நான்காவது இடத்தில் களமிறங்கி சிறப்பான சதம் அடித்தும், இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற முடியவில்லை. காயம் காரணமாக வெளியேறிய ஐயருக்கு வழிவிட வேண்டிய நிலை ருதுராஜ்க்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலக கோப்பையை மனதில் கொண்டு பணிச்சுமை காரணமாக ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் BCCI CoE ஹர்திக் பாண்டியா ஒரு நாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசும் அளவிற்கு தகுதி பெறவில்லை என்று தெரிவித்துள்ளது. 

அணி விவரம்

ஸ்பின் தாக்குதலில் குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளனர், அதே நேரம் ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராக இடம் பெற்றுள்ளார். ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், நிதீஷ் குமார் ரெட்டி சீம் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் விருப்பமாக சேர்க்கப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11 அன்று வடோதராவில் நடைபெற உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகள் ஜனவரி 14 மற்றும் 18 தேதிகளில் ராஜ்கோட் மற்றும் இந்தூரில் நடைபெறுகிறது.

15 பேர் கொண்ட இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, மொஹமது சிராஜ், ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யசஸ்வி ஜெய்ஸ்வால்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.