Thalaivar 173: "அதனருகில் வரை வந்து மிஸ் ஆகியது; அது இன்று.!" – நெகிழும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி

ரஜினியின் 173வது படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Thalaivar 173
Thalaivar 173

6வது முறையாக ரஜினி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். குடும்ப திரைப்படமாக இப்படம் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்திரைப்படம் குறித்தும், ரஜினியை இயக்குவது குறித்தும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், ” ஒரு காலத்தில், சிறுநகரத்திலிருந்து வந்த ஒருவனுக்கு, அவனுடைய ஃபேவரிட் நடிகரான சூப்பர் ஸ்டாரை சந்தித்துப் புகைப்படம் எடுப்பது கனவாக இருந்தது.

அந்தக் கனவுதான் அவனுடைய சினிமா ஆர்வத்தை முன்னோக்கி அழைத்துச் சென்றது. அந்தப் பெருங்கனவு ஒரு நாள் நிகழ்ந்தது.

அதன் பிறகு, அதே நடிகரை வைத்து படம் இயக்குவது அவனுடைய பெரிய கனவாக இருந்தது. அது அருகில் வரை வந்து மிஸ் ஆகிவிட்டது.

Thalaivar 173 - Ciby Chakravarthi
Thalaivar 173 – Ciby Chakravarthi

பிறகு, அதுவொரு நாள் நிகழும் என நம்பிக்கையுடன் இருந்தான். அது இன்று நடந்திருக்கிறது.

‘கனவுகள் நனவாகும், அதிசயங்கள் நடக்கும்’ என தலைவர் சொன்ன விஷயங்களையே நான் இப்போது நினைவுகூர விரும்புகிறேன்.

சில சமயங்களில், வாழ்க்கை கனவுகளைத் தாண்டி இன்னும் பெரியதாக ஆகிவிடும்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.