சென்னை: புத்தாண்டு, பொங்கல் பரிசாக #TAPS அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம், திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும் என புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், இது அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசு என கூறியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய […]