Parasakthi: "திருச்சில இருந்து ஒரு தியேட்டர் ஓனர் அழைத்து, உங்க படம் வரணும்னு.!" – சுதா கொங்கரா

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான ‘பராசக்தி’ திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார்.

ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது.

SK Parasakthi
SK Parasakthi

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.

படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.

சுதா கொங்கரா பேசுகையில், “மணி சார் எனக்கு கத்துக்கொடுத்த முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்னு ஆசைப்படுகிறேன்.

இது நடக்காது, முடியாது, வராதுனு சொல்றதெல்லாம் நடத்தி காட்டணும்னுதான் என் குருநாதர் எனக்கு சொல்லி கொடுத்துருக்காரு.

அதுதான் ‘பராசக்தி’. எனக்கு இன்னைக்கு பேச பெருசா எதுவும் இல்ல. ‘பராசக்தி’ பேசும், படத்த பாத்துட்டு நீங்க பேசுங்க. அதுதான் படத்துக்கு தேவை!

Sudha Kongara
Sudha Kongara

ஒரு தியேட்டர் ஓனர் திருச்சில இருந்து கூப்பிட்டு உங்க படத்துமேல இருந்த பிரச்சனையெல்லாம் முடிஞ்சதா?ன்னு கேட்டாரு. அவர்கிட்ட முடிஞ்சதுனு சொன்னேன்.

அதுக்கு அவர், ‘ஒரு விஷயம் சுயநலமா சொல்றேன் மா. உங்க படம் ரிலீஸ் ஆகணும். அப்போதான் தியேட்டருக்கு மக்கள் வருவாங்க. அப்போதான் எல்லாரும் லாபம் அடைவாங்க. அப்போதான் எங்களுக்கும் நல்லது’னு சொன்னாரு.

இந்தப் பொங்கலுக்கு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகுது. இரண்டு படமும் நல்லா ஓடணும். தியேட்டருக்கு மக்கள் நிறைய வரணும். அப்போதான் சினிமா வாழும். எல்லாரும் தியேட்டருக்கு போய் படம் பாருங்க!” எனப் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.