மஹிந்திராவின் பிரசத்தி பெற்ற XUV700 மாடலுக்கு மாற்றாக புதிய XUV 7XO எஸ்யூவி விற்பனைக்கு ரூ.13.66 லட்சம் ஆரம்பம் முதல் துவங்குகின்ற நிலையில், முதலில் வாங்கும் 40,000 நபர்களுக்கு மட்டுமே இந்த அறிமுக சலுகை விலை கிடைக்க உள்ளது.
மஹிந்திராவின் புதிய மின்சார வாகனங்களான XEV சீரிஸ் கார்களிலிருந்து பல்வேறு நவீன அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
Mahindra XUV 7XO
முந்தைய XUV 700 மாடலின் விலையை அடிப்படையாகவே அமைந்திருந்தாலும், இந்த கார் பல்வேறு நவீன அம்சங்களுடன் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ ஆனது AX, AX3, AX5, AX7, AX7 T மற்றும் AX7 L என மொத்தம் 6 முக்கிய வேரியண்ட்களில் கிடைக்கிறது.
பழைய மாடலில் இருந்த அதே சக்திவாய்ந்த இன்ஜின் தேர்வுகளே இதிலும் தொடர்கின்ற நிலையில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆனது 200 hp பவர் வெளிப்படுத்தும். 2.2 லிட்டர் டீசல்: 185 hp வரை பவர் வெளிப்படுத்துகின்றது. 6-வேக மேனுவல் மற்றும் 6-வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதிகளுடன் கிடைக்கின்ற நிலையில் டீசல் மாடலில் ஆல் வீல் டிரைவ் (AWD) வசதியும் உள்ளது.
முன்பக்கம் செங்குத்தான மற்றும் கூர்மையான தோற்றத்துடன் பெற்ற புதிய கிரில் மற்றும் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், முன்பக்க பம்பரில் இரட்டை எல்இடி பனி விளக்குகளை பெற்றதாகவும், பக்கவாட்டில் புதிய டிசைனை கொண்ட அலாய் வீல்கள் மற்றும் பின்பக்கத்தில் புதிய டெயில் லைட் வடிவமைப்பு கொண்டு ஒட்டுமொத்தமாக காரின் தோற்றம் மேம்பட்டுள்ளது.

உட்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களாக எக்ஸ்இவி 9எஸ் போல மூன்று திரைகள் ஆனது உயர்தர மாடல்களில் டிரைவர் டிஸ்ப்ளே, சென்டர் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் முன் இருக்கை பயணியின் பொழுதுபோக்கிற்காகத் தனித் திரை என மொத்தம் மூன்று திரைகள் உள்ளன.
வென்டிலேஷன் வசதி கொண்ட முன் இருக்கைகள், டிரைவர் இருக்கைக்கு மெமரி வசதி, மற்றும் பின் இருக்கை பயணிகள் கால்களை நீட்டிக்க முன் இருக்கையை நகர்த்தும் ‘பாஸ் மோட்’, 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் டால்பி அட்மாஸ் வசதியுடன் பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், மற்றும் குளிர்சாதனக் கட்டுப்பாட்டிற்கான (HVAC) டச் பேனல் உள்ளது.
XUV 7XO காரில் லெவல் 2 ADAS தொழில்நுட்பத்துடன் 540-டிகிரி கேமரா வசதி, 7 காற்றுப்பைகள் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்கிங் உடன் Bharat NCAP பாதுகாப்புத் தரநிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் போன்ற கார்களுக்கு புதிய மஹிந்திரா XUV 7XO கடும் போட்டியாக அமையும்.
| Engine | AX | AX3 | AX5 | AX7 | AX7 T | AX7 L |
| 2-litre Turbo-petrol MT | Rs 13.66 lakh | Rs 16.02 lakh | Rs 17.52 lakh | Rs 18.48 lakh | —– | —– |
| 2-litre Turbo-petrol AT | —– | Rs 17.47 lakh | 18.97 lakh | Rs 19.93 lakh | Rs 21.97 lakh (7-seater) / Rs 22.16 lakh | Rs 23.45 lakh (7-seater) / Rs 23.64 lakh (6-seater) |
| 2.2-litre Diesel MT | Rs 14.96 lakh | Rs 16.49 lakh | Rs 17.99 lakh | Rs 18.95 lakh | Rs 20.99 lakh (7-seater) / Rs 21.39 lakh (6-seater) | Rs 22.47 lakh |
| 2.2-litre Diesel AT | —– | Rs 17.94 lakh | Rs 19.44 lakh | Rs 20.4 lakh | Rs 22.44 lakh (7-seater) / Rs 22.84 lakh (6-seater) | Rs 24.11 lakh (6-seater only) |
| 2.2-litre Diesel AT AWD | —– | —– | —– | Rs 21.4 lakh | Rs 23.44 lakh | Rs 24.92 lakh |



