வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை நீக்கியதற்கு சசி தரூர் கண்டனம்

கொல்கத்தா,

2026 ஐ.பி.எல். போட்டிக்கான மினி ஏலத்தில் 7 வங்காளதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகபந்துவீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.

அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கும்இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது.

இந்த நிலையில், வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், முஸ்தபிசுர் ரகுமானை நீக்கியதற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பிசிசிஐ, முஷ்தபிசுர் ரகுமானை மிகவும் பரிதாபகரமான முறையில் அணியிலிருந்து நீக்கியுள்ளது. ஒருவேளை வங்காளதேசத்தின் இந்து வீரர்கள், லிட்டன் தாஸ் அல்லது சௌம்யா சர்க்கார் போன்றவர்கள் அணியில் இருந்திருந்தால் பிசிசிஐ என்ன செய்திருக்கும்?

ஒரு நாடு, ஒரு தனிமனிதன், அவரது மதம் – இங்கே நாம் யாரைத் தண்டிக்கிறோம்? விளையாட்டில் புகுத்தப்படும் இந்த அர்த்தமற்ற அரசியல் நம்மை எங்கே கொண்டு செல்கிறது? ஒரு தனிப்பட்ட விளையாட்டு வீரரை அவரது நாட்டின் அரசியல் சூழ்நிலைக்குப் பொறுப்பாக்குவது முறையல்ல” என்று தெரிவித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.