ஶ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கு: 1.7 பில்லியன் டாலர் பாண்ட் இழப்பீடு வழங்க வேண்டுமா?!

2021-ம் ஆண்டு விவகாரத்திற்காக விண்ணப்பித்திருந்தார் ஜோஹோவின் நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு.

அந்த வழக்கு இன்னமும் கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில், அமெரிக்க நீதிமன்றம் ஶ்ரீதர் வேம்புவிடம் அவர் மனைவியின் நிதித் தேவைகளுக்காக 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்ட் ஒன்றை தரும்படி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இது குறித்து ஶ்ரீதர் வேம்புவின் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சி. மெல்ச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்….

கிறிஸ்டோபர் சி. மெல்ச்சர்
கிறிஸ்டோபர் சி. மெல்ச்சர்

“1.7 பில்லியன் டாலர் பாண்ட் உத்தரவு ஓராண்டிற்கு முன்பு வந்த உத்தரவு ஆகும். இந்த உத்தரவு பொய்யான குற்றச்சாட்டுகளால் வந்தது ஆகும்.

காரணம், ஶ்ரீதர் வேம்புவின் மனைவியின் வழக்கறிஞர் பொய்யான வாதங்களை முன்வைத்தார். இதனால், கலிபோர்னியா நீதிபதி தவறாக வழி நடத்தப்பட்டார்.

அந்த வழக்கறிஞரிடம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வாதாடுவதற்கான உரிமம்கூட இல்லை.

ஶ்ரீதர் வேம்பு ஏற்கெனவே அவர் மனைவிக்கு ZPCL-ன் 50 சதவிகித பங்குகளைக் கொடுத்துள்ளார். ஆனால், அதை இப்போது வரை அவர் மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும், ஶ்ரீதர் அவரை ஏமாற்றப் பார்ப்பதாக குற்றம்சாட்டுகிறார்.

மேலும், ஶ்ரீதர் அவர்களது இல்லத்தை அவரின் மனைவிக்கு கொடுத்துவிட்டார்.

ஆனாலும், நீதிபதியை ஏமாற்றி, 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்ட் உத்தரவைப் பெற்றுள்ளனர். பின்னர், அந்த நீதிபதியே அந்தத் தொகை மிக அதிகம் என்பதைப் புரிந்துகொண்டார்.

ஶ்ரீதரால் அவரது பங்குகள் மூலம் 150 பில்லியன் டாலர்கள் கடன் வாங்க முடியும். ஆனால், அந்தப் பணத்தை அவர் மனைவி மறுத்துவிட்டார். அதனால், இவை அனைத்துமே அவரின் மனைவி ஶ்ரீதரை டார்கெட் செய்வதற்காகவே செய்கிறார்.

ஶ்ரீதர் முழுமையாக சட்டத்திற்கு உட்பட்டு நடந்து வருகிறார். 1.7 பில்லியன் டாலர் பாண்ட் உத்தரவு இப்போது செல்லாது. அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ல்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.