வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! – நீளும் ட்ரம்பின் 'அகண்ட அமெரிக்கா' கனவு | Explained

2026-ம் ஆண்டு பிறந்த மூன்று நாள்களில் (ஜனவரி 3), வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கடத்தியது அமெரிக்கப் படை. அதுவும் வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் இருக்கும் பலத்த ராணுவ பாதுகாப்பு கொண்ட டியுனா கோட்டையிலிருந்து.

இதைக் கூறி கொலம்பியாவைப் பயமுறுத்தி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அடுத்ததாக, உடனடி டார்கெட்டாக கிரீன்லேண்டை செட் செய்திருக்கிறார் போலும். இது அவரது பேச்சுகளின் மூலம் வெளிப்படுகிறது.

ட்ரம்பின் அத்தனை நடவடிக்கைகள், பேச்சுகளில் இருந்து ‘அகண்ட அமெரிக்கா’ என்கிற அவருடைய கனவு வெளி வருகிறது.

ஆர்.கண்ணன்
ஆர்.கண்ணன்

‘அகண்ட அமெரிக்கா’ குறித்து விளக்குகிறார் ஐ.நா-வின் முன்னாள் அதிகாரியும், எழுத்தாளருமான ஆர்.கண்ணன்.

“வெனிசுலா அதிபர் மதுரோவின் சிறைபிடிப்பிற்கு ‘போதைப்பொருள் கடத்தல்’ காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இதற்குப் பின்னணியில் முக்கியமாக இருப்பதென்னவோ, ‘வெனிசுலாவில் இருக்கும் எண்ணெய் வளம்’ தான்.

இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே இதுவரை பலமுறை கூறிவிட்டார்.

மதுரோ சிறைப்பிடிப்பிற்குப் பின், வெனிசுலா நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ். இவர் ட்ரம்பிற்கு எதிராக ஆரம்பத்தில் நிறைய பேசிக்கொண்டிருந்தார்.

இது தொடர்ந்தால், மதுரோவை விட கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த பின், டெல்சி அப்படியே அமைதியாகி விட்டார்.

தற்போது 3 – 5 கோடி பில்லியன் பேரல்கள் எண்ணெய்களை டெல்சி கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார். இந்த எண்ணெயின் மொத்த மதிப்பு 3 பில்லியன் டாலர்கள்.

ட்ரம்ப் பேசும்போது, மதுரோவின் சிறைபிடிப்பிற்கு முன்னும், பின்னும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுடன் பேசியதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

ஆக, மதுரோ சிறைபிடிப்பு சம்பவம் முழுக்க முழுக்க ‘வணிக நோக்கத்திற்காக’ செய்யப்பட்டது ஆகும். மேலும், இது அவரது ஆதிக்கத்தைக் காட்டவும் செய்யப்பட்டது ஆகும்.

நிக்கோலஸ் மதுரோ
நிக்கோலஸ் மதுரோ

ரிஸ்க் எடுக்கும் ட்ரம்ப்

வெனிசுலாவில் மின்சாரம் தொடங்கி ரயில்வே வரை பல உள்கட்டமைப்புப் பணிகளை செய்துள்ளது சீனா. சீனாவும், வெனிசுலாவும் எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து வருகிறது.

ஆனால், வெனிசுலாவில் சீனாவின் முதலீட்டிற்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் தான் ட்ரம்ப் காய் நகர்த்துவார்.

இந்த இடத்தில் ‘டோன்ரோ கோட்பாடு’ குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

டோன்ரோ கோட்பாடு என்றால் அமெரிக்கக் கண்டத்திற்குள் பிற கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் உள்வரக்கூடாது.

வெனிசுலா இடதுசாரி கொள்கையை தழுவிய பின், ரஷ்யா, சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டத் தொடங்கியது.

இது முன்னர் அமெரிக்க அதிபர்களாக இருந்த எவருக்கும் பிடிக்கவில்லை தான். ஆனால், ட்ரம்ப் அளவிற்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை. அதனால், வெனிசுலாவைக் கைப்பற்றுவதை ட்ரம்ப் செய்து காட்டியிருக்கிறார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கை அவரது ‘அகண்ட அமெரிக்கா’ கனவைக் காட்டுகிறது.

கிரீன்லேண்ட் விவகாரம்

80 ஆண்டுகளுக்கு முன், ட்ரூமன் கிரீன்லேண்டை 100 பில்லியன் டாலர் தங்கத்திற்கு விலைக்கு வாங்குவதாக இருந்தார். ஆனால், அது அப்போது நடக்கவில்லை.

இப்போது ட்ரம்ப் அதுகுறித்து பேசுகிறார். அடுத்ததாக, கனடாவை 51-வது மாகாணம் என்று கூறுகிறார். பனாமா கால்வாய் நாங்கள் கட்டியது என்று கூறுகிறார் ட்ரம்ப்.

கிரீன்லேண்டைக் கைப்பற்றுவது குறித்து ட்ரம்ப் பேசும்போது, டென்மார்க்கைத் தவிர, வேறு எந்த நாடும் பெரிதாகப் பேசவில்லை.

வெனிசுலா சம்பவத்திற்கு பிறகு, கொலம்பியாவிற்கும் எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப். ஆரம்பத்தில் எதிர்ப்பு காட்டினார்.

பின்னர், ட்ரம்பிற்கு, அந்த நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின், ‘பெட்ரோ உடன் பேசியது மிகப்பெரிய பெருமை’ என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப். இதிலிருந்தே மதுரோவிற்கு நடந்தது பெட்ரோவிற்கு நடக்காது என்று தெரிய வருகிறது.

கியூபா
கியூபா

கியூபாவைக் கண்டுகொள்ளாத ட்ரம்ப்

ஆனால், கியூபா பக்கம் இன்னும் ட்ரம்ப் செல்லவில்லை. அந்த நாடே தானாக விழுந்துவிடும் என்று ட்ரம்ப் கூறுகிறார். உண்மையில், அந்த அளவுக்கு தான் கியூபாவின் பொருளாதார நிலைமை உள்ளது.

மற்ற அமெரிக்க அதிபர்கள் அமெரிக்க கண்டத்தைத் தாண்டி நாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், ட்ரம்ப் தங்களது கொல்லைப்புறமான தென் அமெரிக்காவில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பார்க்கிறார்.

இதற்கு போதைப்பொருள் போன்றவைகளைக் காரணமாகக் கூறுகிறார். அதுவும் உண்மை தான்.

ஆனால், அவைகளைக் கட்டுப்படுத்துவதில் சர்வதேச விதிகள் எதையும் இவர் பின்பற்றுவதில்லை என்பது தான் ஒரே பிரச்னை”. என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.