இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 93 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். கிரிக்கெட்டில் 90 ரன்களுக்கு மேல் ரன் அடித்து சதம் அடிக்க முடியாமல், ஆட்டமிழப்பது என்பது ஒரு வீரருக்கு பெரிய வலியை தரும். இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல் 90 ரன்களுக்கு மேல் அடித்து 100 அடிக்க முடியாதது இருக்கும். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், பலர் 90 ரன்களுக்கு மேல் அடித்து விக்கெட்டை பறி கொடுத்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை அதிக முறை 90-களில் ஆட்டமிழந்த வீரர்களை பற்றி பார்ப்போம்.
Add Zee News as a Preferred Source

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்த பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 28 முறை (டெஸ்ட்: 10, ஒருநாள்: 18) 90 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். 100 சதங்கள் அடித்த சச்சின், இந்த தவறுகளை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால், அவரது சதங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி இருக்கும்.
ஏபி டிவில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா)
‘மிஸ்டர் 360’ என்று அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் தனது சர்வதேச கிரிக்கெட்டில் 14 முறை 90-களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
ராகுல் டிராவிட் (இந்தியா)
இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட், 14 முறை 90 ரன்களுக்கும் 99 ரன்களுக்கும் இடையில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளார்.
கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் அவரும் 14 முறை 90களில் அவுட் ஆகி உள்ளார்.
ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா)
உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ஜாக் காலிஸ், 13 முறை 90களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 45 சதங்கள் அடித்திருக்கும் இவர், இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் அரைசதம் அடித்திருக்கலாம்.
அரவிந்த டி சில்வா (இலங்கை)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் அரவிந்த டி சில்வாவும் இந்த பட்டியலில் உள்ளார். அவரும் சர்வதேச அரங்கில் 13 முறை 90களில் ஆட்டமிழந்துள்ளார்.
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங், தனது அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். ஆனாலும், 13 முறை அவரும் 90களில் ஆட்டமிழந்துள்ளார்.
வீரேந்திர சேவாக் (இந்தியா)
முதல் பந்திலிருந்தே அடித்து ஆடும் சேவாக், சதத்தை பற்றக் கவலைப்படாமல் விளையாடுபவர். அதனால் தானோ என்னவோ, அவரும் 11 முறை 90களில் விக்கெட்டை இழந்துள்ளார்.
விராட் கோலி (இந்தியா)
தற்போதைய கிரிக்கெட் உலகின் ரன் மெஷின் விராட் கோலியும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 12 முறை 90-களில் ஆட்டமிழந்துள்ளார்.
ஷிகர் தவான் மற்றும் எம்.எஸ். தோனி (இந்தியா)
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் மற்றும் கேப்டன் கூல் எம்.எஸ். தோனி ஆகிய இருவரும் தலா 11 முறை 90களில் ஆட்டமிழந்துள்ளனர்.
About the Author
RK Spark