சபரிமலை,
சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரு அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் டாக்டர்களின் ஆலோசனை பேரில் அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று அவருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை உறுதி செய்த டாக்டர்கள் அது தொடர்பான சான்றிதழை வழங்கினர். இதையடுத்து சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தந்திரியை மீண்டும் திருவனந்தபுரம் பூஜப்புரை சிறையில் அடைத்தனர்.