சென்னை: சென்னையில் காணும் பொங்கல் 17ந்தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர். நாடு முழுவதும் வரும் 15ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, 16ந்தேதி மாட்டுப்பொங்கலும், 17ந்தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இந்த காணும் பொங்கல் வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் குடும்பம் குடும்பதாக பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வது வழக்கம். அதாவது, கடற்கரை, பூங்கா, பொருட்காட்சி, ரிசார்ட், கோவில் உட்பட பொழுதுபோக்கு […]