சென்னை: சர்வோம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா; உலகமே செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை நோக்கி செல்கிறது. ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு உயிர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு செயற்கை நுண்ணறிவு பூங்கா அல்லது கிராமம் போன்று உருவாகும். ஏ.ஐ. […]