Samsung-ஐ கதற விட்டு டாப் இடத்துக்கு வந்த ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

2025 ஆம் ஆண்டானது ஸ்மார்ட்போன் விற்பனை சந்தைக்கு மிகப்பெரிய ஏற்ற தாழ்வுகள் நிறைந்த ஆண்டாகவே அமைந்ததுள்ளது. இதற்கிடையில் ஆப்பிள் நிறுவனம் முழு தொழில்நுட்பத் துறையின் கவனத்தையும் தற்போது ஈர்த்த ஒரு மிகப்பெரிய சாதனையைச் செய்துள்ளது. இந்த ஆண்டு உலகளவில் அதிக ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்த நிறுவனமாக ஆப்பிள் மாறியது, குறிப்பாக சாம்சங், சியோமி மற்றும் விவோ போன்ற முக்கிய ஸ்மார்ட்போன் பிராண்டுகளை பின்னுக்கு தள்ளி ஆப்பிள் முன்னிலை வகித்துள்ளது. இந்த தகவலானது கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சியின் மூலம் வெளியிப்படுள்ளது. கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சியின் படி, ஆப்பிள் போன் விற்பனை 2024 உடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

உலகளவில் டாப் இடத்தில் ஆப்பிள்

கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சியின் படி, கடந்த 2025 ஆம் ஆண்டில் உலக சந்தையில் அனுப்பப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஆப்பிள் போன்கள் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. அதன்படி 2025 ஆம் ஆண்டில் ஆப்பிள் சந்தையில் 20 சதவீதத்தைக் கைப்பற்றியது. ஆப்பிளின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஐபோன் 17 தொடர்களே ஆகும். மேலும் தற்போது இந்தியா உட்பட உலகளவில் ஐபோன்களுக்கு வலுவான தேவை ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஆப்பிளுக்குப் பிறகு, சாம்சங் இரண்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது, இது 19 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து Xiaomi 13 சதவீதத்துடன், Vivo 8 சதவீதத்துடன், Oppo 8 சதவீதத்துடன், மற்றும் 32 சதவீத பங்கைக் கொண்ட பிற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் உள்ளன.

Samsung மற்றும் Xiaomi ஏன் பின்தங்கியுள்ளன?

Samsung மற்றும் Xiaomi ஆகியவை பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தின, ஆனால் அவை Apple போன்கள் கொண்டிருக்கும் அதே அளவிலான வாடிக்கையாளர் நம்பிக்கையை அடையத் தவறிவிட்டன. Counterpoint தரவுகளின்படி, Samsung இன் விற்பனை 2025 ஆம் ஆண்டில் நிலையானதாக இருந்தது. இரண்டாவது இடத்தில் இருந்தபோதிலும், Samsung 2024 ஆண் ஆண்டை விட சிறப்பாக செயல்பட்டது. இருப்பினும், Xiaomi மற்றும் Vivo போன்ற பிராண்டுகள் கடுமையான போட்டியை எதிர்கொண்டன. மலிவு விலை போன்களுக்கான தேவை குறைந்து வருவதால், Xiaomi 13 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றது, இது 2024 ஆண் ஆண்டில் 14 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாறிவரும் சந்தையால் ஆப்பிள் நிருவானதிற்கு பயன்

2025 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் வாங்குபவர் உணர்வில் சில மாற்றம் காணப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. மக்கள் இப்போது ஸ்மார்ட்போனின் விலையை மட்டும் பார்க்காமல், தொலைபேசியின் தரம் மற்றும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை தந்துள்ளது. Apple போன்ற பிராண்டுகள் இதனால் பெரிதும் பயனடைந்துள்ளன. இதனிடையே சாம்சங்கின் கேலக்ஸி ஏ தொடரும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆப்பிள் எவ்வாறு முதலிடத்தை அடைந்தது?

இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஐபோன் தொடர் ஆப்பிளின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதன் மேம்படுத்தப்பட்ட கேமரா, வேகமான செயலி, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் AI அம்சங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன. இளைஞர்கள் முதல் தொழில் வல்லுநர்கள் வரை ஏராளமானோர் தங்கள் பழைய போன்களை மாற்றி ஐபோனுக்கு மாற்றியுள்ளனர். இது ஆப்பிளின் விற்பனையை அதிகரிக்கச் செய்துள்ளது. கூடுதலாக, ஐபோன் 16 தொடர் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் சிறப்பாக செயல்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.