India vs New Zealand ODI: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு நம் நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. ஜனவரி 11ஆம் தேதி முதல் ஒருநாள் தொடர் நடைபெற்றது. இன்று (ஜனவரி 14) இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
Rishabh Pant & Washington Sundar Injured: ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் காயம்
இத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பயிற்சியின்போதே கே.எல். ராகுலுக்கு பேக்கப் விக்கெட் கீப்பராக அணிக்குள் கொண்டு வந்த ரிஷப் பண்டிற்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவர் தொடரை விட்டு விலகிய நிலையில், அவரது இடத்தில் துருவ் ஜுரேலை நிர்வாகம் கொண்டு வந்தது. இந்த சூழலில், முதல் போட்டியின்போது ஆல்-ரவுண்ட்ர் வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்தார். அவர் நியூசிலாந்துக்கு எதிராக 5 ஓவர்களை மட்டுமே பந்து வீசிய நிலையில், பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் ஃபீல்டிங் செய்ய வந்தார்.
Team India: இந்திய அணியில் நடப்பது என்ன?
இந்த நிலையில், வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வு தேவை என்பதால், அவர் விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரராக ஆயூஷ் பதோனியை அணிக்குள் கொண்டு வந்திருக்கிறார் பயிற்சியாளர் கெளதம் கம்பீர். இந்த முடிவு பலரது மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கெளதம் கம்பீர் கூடுதல் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளார். அக்சர் படேல், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் இருக்கையில், அனுபவம் இல்லாத ஆயூஷ் பதோனியை எடுத்தது ஏன்? என்று பலரும் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Krishnamachari Srikanth: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து
இந்த நிலையில், கெளதம் கம்பீர் 2022 மற்றும் 23ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார். அவருடைய வழிகாட்டுதலில் அயூஷ் பதோனி விளையாடியதாலேயே தப்போது அவரை இந்திய அணிக்கு அழைத்து வந்திருக்கிறார் என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
Ayush Badoni: ஆயூஷ் பதோனியின் ரெக்கார்ட் என்ன?
இது தொடர்பாக பேசிய அவர், ஆயூஷ் பதோனியின் உள்ளூர் ஆட்டத்தை வைத்துக்கொண்டு இந்திய அணியில் வாய்ப்பளிக்க வாய்ப்பில்லை. அவரது ரெக்கார்ட் என்ன? ஐபிஎல்லில் அவர் செய்தது என்ன? அவர் ஒன்றும் ஆட்டத்தின் போக்கை மாற்றி எதிரணியின் வெற்றியை பறிக்கக்கூடியவர் அல்ல. அவரால் 6வது இடத்தில் இறங்கி சிக்சர் அடிக்க முடியுமா? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவரை எப்படி பவுலிங் ஆல்-ரவுண்டர் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்.
Gautam Gambhir – Ayush Badoni: ஆயூஷ் பதோனியின் தேர்வு கம்பீரின் அரசியல்
நீங்கள் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஒரு ஆல்-ரவுண்டரை எடுக்க விரும்பினால் அக்சர் படேல் இருக்கிறார். அவர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அசத்த கூடியவர். அவரை தேர்ந்தெடுக்காதது அநியாயம். லக்னோ அணிக்கு கம்பீர் ஆலோசகராக இருக்கும்போது ஆயூஷ் பதோனி விளையாடினார். அதுதான் இந்த தேர்வுக்கு காரணமா? என்னால் வேறு எந்த காரணத்தையும் யோசித்து பார்க்கவில்லை என கூறினார்.
About the Author
R Balaji