ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் இவரா? முன்னாள் CSK வீரருக்கு ஜாக்பாட்

Rajasthan Royals Next Captain: ஐபிஎல் தொடர்பான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன. நாளுக்கு நாள் அத்தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சமீபத்தில் மினி ஏலம் நடந்து முடிந்தது. தங்களுக்கு தேவையான வீரர்களை விடுவித்துக்கொண்ட அணிகள் தேவைப்படும் வீரர்களை எடுத்தது. அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்துக்கொண்டனர். 

Add Zee News as a Preferred Source

Rajasthan Royals: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 

கடந்த ஐபிஎல் தொடரில் இருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேசும் பொருளாக இருந்து வருகிறது. காறணம் அந்த அணியில் இருந்த பல்வேறு குழப்பங்கள். கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனுக்கும் அந்த அணி நிர்வாகத்திற்கு மண கசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அவர் அணியை விட்டு வெளியேறுகிறார் என்ற செய்தி வெளியானது. அதேபோல் சஞ்சு சாம்சனையும் சிஎஸ்கே அணி பேசி வாங்கிவிட்டது. பதிலுக்கு ரவீந்திர ஜடேஜாவையும் சாம் கரனையும் சிஎஸ்கே அணி கொடுக்க வேண்டி இருந்தது. 

Sanju Samson – Ravindra Jadeja Trade: சஞ்சு சாம்சன் – ஜடேஜா வர்த்தகம் 

இது இந்த ஆண்டின் மிகப்பெரிய வர்த்தகமாக இருந்தது. அதேசமயம் இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சஞ்சு சாம்சனை வாங்கியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனிக்கு பின் ஒரு முகம் கிடைத்தது. மறுபுறம் ரவீந்திர ஜடேஜா பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். வரும் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரும் சவாலை சந்திக்க இருக்கிறது. 

Who is the next captain for Rajasthan Royals: அடுத்த கேப்டன் யார்? 

சஞ்சு சாம்சன் சென்ற பின்னர் அந்த அணிக்கு ஒரு கேப்டன் தேவை அது யாராக இருக்கும் என்பதே தற்போது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. பலர் ஜெய்ஸ்வால் அல்லது ரியான் பராக்காக இருக்கும் என கூறுகின்றனர். ஒரு சில ரவீந்திர ஜடேஜா வழிநடத்துவார் என கூறுகின்றனர். 

Ravindra Jadeja: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரவீந்திர ஜடேஜா? 

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக வர இருப்பவர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வர்த்தகம் செய்யப்பட்ட ரவீந்திர ஜடேஜாவை அந்த அணி கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவருடைய அனுபவத்தை கருத்தில் கொண்டு அந்த அணி அவரை கேப்டனாக விரும்புவதாக கூறப்படுகிறது. 

அனுபவம் வாய்ந்த வீரர் 

ரவீந்திர ஜடேஜாவுக்கு தற்போது 37 வயதாகிறது. அவர் இன்னும் அதிகபட்சமாக இரண்டு ஐபிஎல் தொடர்களில் விளையாட வாய்ப்புள்ளது. எனவே அவர் ஓய்வு பெறும் வரை அவரை கேப்டனாக வைத்துக்கொள்ளும் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் ஜெய்ஸ்வால் ஆகியோர் கூடுதல் அனுபவம் பெற முடியும் என அந்த அணி நம்புகிறது. 

Rajasthan Royals Full Squad For IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பட்டியல்

ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், டோனோவன் ஃபெரைரா, சந்தீப் ஷர்மா, ஷுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், யுத்வீர் சிங் சரக், ஜோஃப்ரா ஆர்ச்சர், துஸ்ஹர் டெர்ஷ்னா, துஷர்வே ஆர்ச்சர் பிஷ்னோய், சுஷாந்த் மிஸ்ரா, யாஷ் ராஜ் புஞ்சா, விக்னேஷ் புதூர், ரவி சிங், அமன் ராவ், பிரிஜேஷ் சர்மா, ஆடம் மில்னே, குல்தீப் சென்.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.