IND vs NZ: இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டி! 2 வீரர்கள் அதிரடி மாற்றம்!

IND vs NZ 2nd ODI Rajkot: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பில்டிங் தேர்வு செய்தது. 301 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் சுப்மன் கில்லின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், தொடரை வெல்ல களம் இறங்குகிறது இந்தியா. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக ஆயுஸ் பதோணி சேர்க்கப்பட்டுள்ளார். 

Add Zee News as a Preferred Source

 Words of wisdom from @klrahul as he shared his knowledge and inspired budding cricketers during #TeamIndia’s training session in Vadodara. #INDvNZ |…

— BCCI (@BCCI) January 13, 2026

வாஷிங்டன் சுந்தருக்கு என்ன ஆனது?

முதல் ஒருநாள் போட்டியில் பந்து வீசி கொண்டிருக்கும்போது வாசிங்டன் சுந்தருக்கு விலா எழும்பில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்பு முக்கியமான நேரத்தில் தான் பேட்டிங் இறங்கினார். இருப்பினும் அவரால் ரன்கள் கூட ஓட முடியவில்லை. இந்நிலையில் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக லக்னோ அணியை சேர்ந்த ஆயுஸ் பதோணி ஆல் ரவுண்டராக அணியில் இணைந்துள்ளார். இருப்பினும் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமே. காரணம் ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு அதிக சாதகமாக இருக்கும் என்பதால் நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

ராஜ்கோட் மைதானம் 

ராஜ்கோட் மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இங்கு அசால்டாக 300 பிளஸ் ரன்களை அடிக்க முடியும். பந்து நேராக பேட்டிற்கு வரும் என்பதால் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கும். எனவே இன்றைய போட்டியிலும் இரண்டு அணிகளும் 300-க்கும் மேல் ரன்கள் அடிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா அதிக சிக்ஸர்களின் பறக்க விட வாய்ப்புள்ளது. 

இந்திய அணியில் மாற்றங்கள் 

முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய வாசிங்டன் சுந்தருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டியும், பவுலிங்கில் பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக ஹர்ஷிதீப் சிங்கும் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இவர்களை தவிர வேறு யாரும் மாற்றப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இறங்கியுள்ளது. நியூசிலாந்து அணியில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் டாஸ் வெற்றி பெற்றால் இரண்டு அணிகளும் முதலில் பீல்டிங் தான் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.

உத்தேச பிளேயிங் 11

ரோகித் சர்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்),  நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ரானா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்

 

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.